பதிவு செய்த நாள்
11 நவ2011
14:12

வதோதரா : குஜராத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக தொழில் ஜவுளி உற்பத்தி துறையிலேயே அதிக பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இத்தொழில் தற்போது மெல்ல மெல்ல சரிவடைந்து வருவதாக நைட் ஃபிரான்க் இந்தியா நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு குஜராத், மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஜவுளி தொழில் வளர்ச்சி குறித்து நடத்தப்பட்டுள்ளது. இதில் குஜராத்தில் ஜவுளி தொழில் 18 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. சுமார் 2 லட்சம் பேர் இத்தொழிலை நிறுத்தி உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் ஜவுளி உற்பத்தி 6 சதவீதத்தில் இருந்து 12 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதே போன்று கடந்த 10 ஆண்டுகளில் ஜவுளி உற்பத்தி தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் 22 சதவீதம் குறைந்துள்ளது. சுமார் 1957 தொழிற்சாலைகள் வரை மூடப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் ஜவுளி தொழில் சுமார் 1.5 மடங்கிற்கு அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜவுளி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|