சிறுசேமிப்புத் திட்ட வட்டி உயர்வு : கிசான் விகாஸ் பத்திரம் இனி கிடையாதுசிறுசேமிப்புத் திட்ட வட்டி உயர்வு : கிசான் விகாஸ் பத்திரம் இனி கிடையாது ... தங்கம் விலை அதிரடி உயர்வு : ஒரு சவரன் ரூ. 21,904 தங்கம் விலை அதிரடி உயர்வு : ஒரு சவரன் ரூ. 21,904 ...
குறைகிறது பெட்ரோல் விலை?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2011
10:29

புதுடில்லி : சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், அடுத்த வாரம் பெட்ரோல் விலையைக் குறைக்க, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அனேகமாக, லிட்டருக்கு 80 பைசா குறைக்கப்படலாம். பெட்ரோல் மீதான விலை நிர்வாகக் கட்டுப்பாட்டு முறையை, மத்திய அரசு வாபஸ் பெற்றதை அடுத்து, சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல் விலையைப் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இதனடிப்படையில், கடந்த வாரம் பெட்ரோல் விலை, லிட்டருக்கு 1.80 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டில், இது நான்காவது விலை உயர்வாகும். தற்போது, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 80 பைசா குறைக்க, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அடுத்த வாரம், இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும். அப்படி குறைக்கப்பட்டால், 2009ம் ஆண்டு ஜனவரிக்கு பின் நிகழும், முதல் விலை குறைப்பாக இருக்கும். வரிகளைத் தவிர்த்துப் பார்த்தால், இந்த விலை குறைப்பு, 60 பைசாவாக இருக்கும் என, மத்திய அரசு அதிகாரிகள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)