ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் ரயில்வே துறையின் வருவாய் 10 சதவீதம் உயர்வுஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் ரயில்வே துறையின் வருவாய் 10 ... ... தென்னை மரம் ஏறுபவர்களுக்காக கேரளாவில் ஆன்-லைன் டைரக்டரி தென்னை மரம் ஏறுபவர்களுக்காக கேரளாவில் ஆன்-லைன் டைரக்டரி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை நிலவரம்: கரடியின் பிடி மேலும் இறுகுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2011
03:12

இதுநாள் வரை கிரீஸ் நாட்டின் நிதிநெருக்கடியால், சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. தற்போது, இத்தாலியும் நிதி நெருக்கடியில் உள்ளதாக செய்தி வெளியானதால், நடப்பு வாரம் முழுவதும் பங்கு வர்த்தகம் மிகவும் சுணக்கமாகவே இருந்தது.
இந்நிலையில், இந்திய வங்கிகளின் செயல்பாடு குறித்து, சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான, மூடிசின் அறிவிப்பால், வங்கித் துறை பங்குகள் அனைத்தும் வீழ்ச்சி கண்டன. "சென்செக்ஸ்', 18,000 புள்ளிகளை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 17,000ன் விளிம்பை தொட்டுள்ளது.
நடப்பு வாரத்தில், பக்ரீத் மற்றும் குருநானக் ஜெயந்தி போன்றவற்றால், திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது.
குறியீட்டு எண்கள்: பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட சுணக்க நிலையால், வெள்ளிக் கிழமையன்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 169 புள்ளிகள் சரிவடைந்து, 17,193 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 52 புள்ளிகள் குறைந்து, 5,168 புள்ளிகளிலும் நிலைபெற்றன.
மூன்று நாள் வர்த்தகத்தில், "சென்செக்ஸ்' 377 புள்ளிகள் குறைந்து போனது. வெள்ளிக் கிழமையன்று, சென்ற செப்டம்பர் மாதத்திற்கான, நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறித்த புள்ளி விவரம் வெளிவந்தது. இதில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதத்தை விட, 4.2 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1.9 சதவீதமாக குறைந்து போனது என்ற செய்தியால், பங்கு வர்த்தகம் மேலும் சுணக்கம் கண்டது.
காலாண்டு முடிவுகள்: நடப்பு 2011-12ம் நிதியாண்டின், இரண்டாவது காலாண்டிற்கான நிதிநிலை முடிவுகள் இன்னும் வந்து கொண்டுள்ளன. இதில், முந்த்ரா போர்ட், அதானி போர்ட், லட்சுமி விலாஸ் பேங்க், அன்சால் பிராப்பர்டீஸ், ஐ.ஆர்.பி.இன்ப்ரா, மகிந்திரா சத்யம், ஏ.பீ.பீ. ஆகிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட அதிகரித்துள்ளது.
அதேசமயம், பேங்க் ஆப் இந்தியா, கெடிலா ஹெல்த்கேர், எஸ்.கே.எஸ். மைக்ரோ பைனான்ஸ் போன்ற நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் குறைந்து போயுள்ளது.
காலாண்டு முடிவுகள் குறித்த தகவல்கள், தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதை, உன்னிப்பாக கவனித்து, சிறப்பாக செயல்படும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, உங்களுடைய தொகுப்பில், வைத்து கொள்ளலாம்.
மூடிஸ் நிறுவனம்: சர்வதேச அளவில், தரக் குறியீடுகளை வழங்கி வரும், மூடிஸ், இந்திய வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்து வருவதாக கூறி, இந்திய வங்கிகளின் தரக் குறியீட்டை குறைத்தது.
இந்நிறுவனத்தின் அறிவிப்பு வெளிவந்த மறுதினம், எஸ் அண்டு பி., நிறுவனம், இந்திய வங்கிகளின் தரக்குறியீட்டை உயர்த்தியுள்ளதாக அறிவித்தது. இது, முதலீட்டாளர்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தியது. மூடிஸ் நிறுவனத்தின் அறிவிப்பு வெளியான, புதன் கிழமை அன்று, இந்திய பங்குச் சந்தைகளில், வங்கிப் பங்குகளின் விலை மிகவும் வீழ்ச்சி கண்டன.
அஞ்சலக சேமிப்பிற்கான வட்டி: நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அஞ்சலக சேமிப்பிற்கான, வட்டி விகிதம் பல ஆண்டுகளாக கூட்டப்படாமல் இருந்தது.
இதனால், பல முதலீட்டாளர்கள், அஞ்சலக சேமிப்பில் இருந்த தொகையை, அதிக வட்டி கிடைக்கும் வங்கி உள்ளிட்ட இதர சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கினர். இதையடுத்து, அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான, வட்டி விகிதம், தற்போது, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், என்.எஸ்.சி., மற்றும் பி.பி.எப்., போன்ற அஞ்சலக டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் கூட்டப்பட்டுள்ளது. அதேசமயம், கிசான் விகாஸ் பத்திரத் திட்டம் விலக்கி கொள்ளப்பட இருப்பதாக, அறிவிப்பு வெளியானது. இது, டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அஞ்சல சேமிப்பிற்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால், வங்கிகள் இல்லாத கிராமப்புற மக்கள் இந்த சேமிப்பு திட்டத்தில், சேமிக்க இது உதவும். பல வங்கிகள், டெபாசிட்களுக்கு, இதை விட அதிகமாக, வட்டி வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ்: தனியார் துறையைச் சேர்ந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின், இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு, விமான எரிபொருளுக்கான தொகையைக் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு, கடன் கொடுத்த வங்கிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்நிறுவனத்தின் பங்கின் விலை மட்டுமின்றி, இதற்கு கடன் கொடுத்த வங்கிப் பங்குகளின் விலையும் சரிவடைந்து போனது. கிங்பிஷர் நிறுவனம் மட்டுமின்றி, விமான சேவையில் ஈடுபட்டு வரும் மேலும் பல நிறுவனங்களும், இழப்பில் தான் பறந்து கொண்டுள்ளன.
தங்கம் விலை: கிரீஸ் நாட்டைத் தொடர்ந்து, இத்தாலியும் பிரச்னைகளில் சிக்கியுள்ளது. சர்வதேச அளவில், பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், தங்கத்தின் விலை, நடப்பு வாரத்தில், புதிய உச்சத்தை தொட்டது. ஒரு கிராம் சுத்த தங்கம், 3,000 ரூபாயை எட்டி விடும் நிலையில் உள்ளது. அண்மையில், தங்கத்தின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. இதுபோன்ற நிலை, மீண்டும் ஏற்படும் போது, தங்கத்தை வாங்கி வைப்பது நல்லது.
வரும் வாரம் எப்படி இருக்கும்? எதிர்பார்த்தபடியே, நடப்பு வாரத்திலும் பங்கு வர்த்தகம் மிகவும் சரிவடைந்தே இருந்தது. வெள்ளியன்று, ஐரோப்பிய நாடுகளின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நிலைப்பாட்டால், அன்றைய தினம் அமெரிக்க பங்குச் சந்தைகளில் வர்த்தகம், 2 சதவீதத்திற்கும் அதிகமாக கூடியிருந்தது.
இதன் தாக்கம் திங்களன்று இந்தியப் பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கலாம். எனவே, திங்களன்று, இந்திய பங்குச் சந்தைகளின், தொடக்கம் நன்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உலக மற்றும் உள்நாட்டு நிலவரங்களில் இடர்பாடு ஏற்படும் நிலையில், அது பங்கு வர்த்தகத்தில் சுணக்க நிலையே ஏற்படுத்தக் கூடும்.
- சேதுராமன் சாத்தப்பன் -

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)