அத்யாவசிய மருந்துகள் விலை குறைவுஅத்யாவசிய மருந்துகள் விலை குறைவு ... தபால் நிலையங்களில் சோலார் மின் விளக்கு விற்பனை தபால் நிலையங்களில் சோலார் மின் விளக்கு விற்பனை ...
செய்தித்தாள் தயாரிப்பைநிறுத்தியது டி.என்.பி.எல்.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2011
11:18

தமிழக அரசுக்குச் சொந்தமான, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (டி.என்.பி.எல்.,), செய்தித்தாள் தயாரிப்புப் பணியை முற்றிலுமாக நிறுத்திவிட்டது. வெறும் காகிதத் தயாரிப்பை மட்டும் தொடர்கிறது.தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், 1984ல், தமிழக அரசால் துவக்கப்பட்டது. பத்திரிகைகளுக்கான செய்தித்தாள்கள் மற்றும் அச்சு காகிதத் தயாரிப்பில், 23 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. முதல் ஐந்து ஆண்டுகள் தத்தித் தத்தி இயங்கிய இந்நிறுவனம், 1989ல், இருந்தே லாபத்தில் தான் இயங்கி வருகிறது. மிகச் சில ஆண்டுகளைத் தவிர, அனைத்து ஆண்டுகளிலும் ஏறுமுகம் தான். சமீபத்தில் கூட, கடந்த ஆண்டுக்கான ஈவுத் தொகையில், தமிழக அரசின் பங்கான, 12 கோடியே 22 லட்சம் ரூபாயை, முதல்வரிடம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் ஒப்படைத்தது.எல்லாமே சுமுகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில், இனிமேல் செய்தித்தாள்களையே தயாரிப்பதில்லை என்ற அதிர்ச்சி முடிவை, மூன்று ஆண்டுகளுக்கு முன், டி.என்.பி.எல்., எடுத்துள்ளது. நிறுவனத்தின் பெயரிலேயே செய்தித்தாள் இருக்கும் நிலையில், டி.என்.பி.எல்.,லின் இந்த முடிவு சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் உயரதிகாரி கூறியதாவது:அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில், லாபத்தில் இயங்கிவரும் மிகச் சில நிறுவனங்களில் டி.என்.பி.எல்.,லும் ஒன்று. இதற்குக் காரணம், காலத்துக்கேற்ற முடிவுகளை இயக்குனர்கள் குழு எடுப்பதே. அப்படி ஒரு முடிவு தான், செய்தித்தாள் தயாரிப்பை நிறுத்துவதும். அச்சுக் காகிதங்களின் விற்பனை மதிப்பு, ஒரு டன்னுக்கு, 43 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. அதுவே, செய்தித்தாள்களின் விற்பனை மதிப்பைக் கணக்கிட்டால், நல்ல நாட்களிலேயே ஒரு டன்னுக்கு, 33 ஆயிரம் ரூபாய் தான் கிடைக்கும். சில நேரங்களில் அதை விடவும் குறைவாகக் கிடைக்கும். சந்தைப்படுத்தல் மற்றும் உற்பத்திக் கோணத்தில் ஆராய்ந்து தான், இனி செய்தித்தாள்களைத் தயாரிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், இந்த முடிவின் மூலம் தான் எங்கள் நிறுவனம் இழப்பைத் தவிர்த்தது. வெறும் செய்தித்தாள்களை மட்டுமே தயாரித்து வரும் நான்கைந்து தனியார் நிறுவனங்கள், மூடுவிழாவை நோக்கி சென்றுகொண்டிருப்பதன் மூலம், இதைப் புரிந்துகொள்ளலாம்.
டி.என்.பி.எல்.,லின் இந்த முடிவால், காகிதக்கூழ் தயாரிக்கும் ஒரே ஒரு இயந்திரம் மட்டும் பயன்படுத்தப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட அந்த இயந்திரத்தின் இன்றைய சந்தை மதிப்பு, ஐந்து கோடி ரூபாய் இருக்கும். ஆனாலும், அந்த இயந்திரத்தின் பல்வேறு பாகங்களை, வேறு வேறு இயந்திரங்களுக்கு பயன்படுத்திக்கொண்டோம்.அரசுக்கும் எங்களால் எந்த இழப்பும் ஏற்படவில்லை. எங்களின் மிகப் பெரிய வாடிக்கையாளர்களான தமிழ்நாடு பாடநூல் கழகமும், தமிழ்நாடு எழுதுபொருள் அச்சுத் துறையும் நூறு சதவீதம் காகிதங்களை எங்களிடம் தான் கொள்முதல் செய்கின்றன. ஆண்டுதோறும் கொள்முதல் அளவு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.ஆனால், இந்த முடிவு எடுக்கப்பட்ட, 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் ஏன் பெரியளவு லாபம் அதிகரிக்கவில்லை என்பதற்கான பதிலை, அவர்களால் சொல்ல முடியவில்லை.
லாபம் அளவு
ஆண்டு கோடி
2005 101
2006 125
2007 163
2008 158
2009 158
2010 195

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)