வீடியோகான் காலாண்டு நிகரலாபம் 27% சரிவுவீடியோகான் காலாண்டு நிகரலாபம் 27% சரிவு ... டி.என்.பி.எல். நிறுவனம்வருவாய் ரூ.302 கோடி டி.என்.பி.எல். நிறுவனம்வருவாய் ரூ.302 கோடி ...
வெளி மாநிலங்களுக்கு செல்லும் காற்றாலை மின் திட்டங்கள் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2011
00:09

- வீ.அரிகரசுதன் -
தமிழகத்தில், காற்றாலை மின் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்பிருந்தும், நிலுவை தொகை வழங்குவதில் அரசின் மெத்தனம், மின்மாற்றிகள் மற்றும் மின் பாதையை (டிராஸ்மிஷன் லைன்) மேம்படுத்தாமல் உள்ளது போன்றவற்றால், பல முதலீட்டாளர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மரபு சாரா மின் உற்பத்தியில், காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரம் தூய்மையானதாக உள்ளது. இந்தியாவில், காற்றாலை மின் உற்பத்தியில், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
உற்பத்தித் திறன்: தமிழகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில், 2,000க்கும் மேற்பட்ட காற்றாலை பண்ணைகள் உள்ளன. இவை, 6,500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.காற்று அதிகம் வீசும், மே முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், நாள்தோறும் 2,500 முதல் 3,000 மெகா வாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதர காலத்தில், நாள்தோறும் சராசரியாக, 400 மெகா வாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நிலுவை: காற்றாலை மூலம் பெறப்படும் மின் உற்பத்தியை, சில நிறுவனங்கள் சுய பயன்பாட்டிற்கு பயன்படுத்துகின்றன. பெரும்பான்மை நிறுவனங்கள், ஒரு யூனிட் மின்சாரத்தை, 2.37 முதல் 3.39 ரூபாய் வரை, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்பனை செய்கின்றன. மாதந்தோறும் கொடுக்கப்படும் பில் தொகைக்கு, 30 நாட்களுக்குள் தமிழ்நாடு மின்சார வாரியம் பணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற நியதி உள்ளது. ஆனால், வாரியம் இதை பின்பற்றுவதில்லை.
சென்றாண்டு அக்டோபர் முதல் நடப்பாண்டு அக்டோபர் வரை, தமிழ்நாடு மின்சார வாரியம் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு, 2,500 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளது.
மோசமான நிலை: காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை வெளிகொண்டு வருவதற்கான, துணை மின் நிலையங்கள் மற்றும் மின் பாதைகள் மிகவும் மோசமாக உள்ளன. தமிழகத்தில், காற்றாலை மின் திட்டங்களில் கூடுதலாக, 10,000 மெகா வாட் உற்பத்தி செய்யும் வாய்ப்பிருந்தும், பல முதலீட்டாளர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து காற்றாலை மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ரெட்டி என்பவர் கூறும்போது, 'தமிழகத்தில், தற்போது, 10 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை திட்டங்களில் முதலீடு செய்துள்ளோம்.
மின்வாரியம், உற்பத்தி செய்யும் மின்சாரத்தை முழுமையாக வாங்க மறுப்பதுடன், வாங்கிய மின்சாரத்திற்கான, பணத்தையும் ஒழுங்காக வழங்குவதில்லை. எனவே, தமிழகத்தில் காற்றாலைகளுக்கு அதிக வாய்ப்பிருந்தும், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில், 30 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில், காற்றாலைகளில் முதலீடு செய்துள்ளோம்' என்றார்.
மின் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, 'காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை வெளி கொண்டு வருவதற்கு, 33 முதல் 230 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையங்களே உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் இதை, 400 கிலோ வாட் என்றளவில் அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இவை செயல்பாட்டுக்கு வரும் போது நிலைமை சீராகும்' என்றார்.
சரிவு: காற்றாலைகள் தயாரிக்கும் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், காற்றாலை டர்பைன் விற்பனை தொடர்ந்து அதிகரித்திருந்த நிலையில், சில மாதங்களாக, இதன் விற்பனை குறையத் தொடங்கியுள்ளது. மின் வாரியம் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையிலான பிரச்னைகளால், டர்பைன்கள் விற்பனை குறைந்துள்ளது. இருந்த போதிலும், தமிழக காற்றாலை டர்பைன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆந்திரா, கர்நாடகம், குஜராத் போன்ற மற்ற மாநிலங்களிலிருந்து, அதிகளவில் ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன.
இந்தியாவில், 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் காற்றாலை டர்பைன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இவை, 225 முதல் 2,500 கிலோ வாட் திறன் கொண்ட, காற்றாலை டர்பைன்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.
10 மெகா வாட் மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமென்றால், 850 கிலோ வாட் திறன் கொண்ட, 11 டர்பைன்களை நிறுவ வேண்டும். தமிழகத்தில், பெரும்பாலான காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள், 850 கிலோ வோல்ட் திறன் கொண்ட டர்பைன்களையே நிறுவியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
சாக்கு போக்கு: இதுகுறித்து, இந்திய காற்றாலை சங்க தலைவர் மற்றும் உலக காற்றாலை சங்க துணை தலைவர் கஸ்தூரி ரங்கய்யன் கூறியதாவது:நிலுவை தொகை அளிப்பதில் தேவையற்ற காலதாமதம் செய்து வரும் மின் வாரியம், மின் பகிர்மானத்தில் இழப்பு என சாக்குபோக்கு சொல்லி, காற்றாலை நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் பெறுவதை தட்டிக்கழிக்கிறது. வாங்கும் மின்சாரத்திற்கு பணம் தர வேண்டும் என்ற காரணத்தாலும், மின் வினியோகம் சீராக இல்லை என்ற தவறான தகவலை அளிக்கிறது.தமிழகத்தில், மின் பற்றாக்குறையால் ஏராளமான தொழில்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. எனவே, மின்வாரியம் காற்றாலைகளிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக பெற்று கொள்ளும் வகையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதர மாநில அரசுகள், காற்றாலை வாயிலாக பெறும் மின்சாரத்திற்கு, உடனடியாக பண பட்டுவாடா செய்து விடுகின்றன. தமிழக மின்வாரியமும், இதேபோன்று, செயல்பட்டால், இங்கும் அதிகளவில் காற்றாலை வாயிலாக மின் உற்பத்தி மேற்கொள்ள பலர் முன் வருவர்.
தமிழகத்தின் மின் பற்றாக்குறையும் சீரடையும். இவ்வாறு கஸ்தூரி ரங்கய்யன் கூறினார்.     ஒரு மெகா வாட் மின் உற்பத்திக்கு ரூ. 6 கோடி தமிழகத்தில், காற்றாலை மூலம் ஒரு மெகா வாட் மின் உற்பத்தி செய்ய, 6 கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுகிறது. இதன்படி, தற்போதைய, 6,500 மெகா வாட் மின் உற்பத்தி திறனுக்கு, 39 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2008-09ம் ஆண்டில், காற்றாலைகளில், 805 மெகா வாட் மின் உற்பத்திக்கான, முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, 2009-10ல், 890 மெகா வாட், 2010-11ல், 997 மெகா வாட் என்ற அளவிற்கு உள்ளது. சென்ற அக்டோபர் வரை, 400 மெகா வாட்டுக்கும் குறைவாகவே முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில், காற்றாலை மின் உற்பத்தியில், தமிழகம் 40 சதவீத பங்களிப்பை கொண்டு முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், குஜராத், (3,000 மெகா வாட்), மகாராஷ்டிரா (2,500  மெகா வாட்), கர்நாடகா ( 2,000 மெகா வாட்) ஆகியவை உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)