பதிவு செய்த நாள்
16 நவ2011
03:09

மும்பை:சென்ற செப்டம்பர் மாதத்தில், நாடு முழுவதும், காசோலை வாயிலாக, 7 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை மதிப்பை விட,1.4 சதவீதம்(7 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்)குறைவு என,ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
இதே மாதங்களில், வங்கிகள் மூலம் கையாளப்பட்ட காசோலைகளின் எண்ணிக்கை, 2.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 10 கோடியே 84 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து,11 கோடியே12 லட்சமாக அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண் டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், காசோலை வாயிலாக, 48 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற் கொள்ளப்பட்ட பரிவர்த்தனை மதிப்பை விட, 0.1 சதவீதம் (49 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய்) குறைவாகும்.
நாட்டில் உள்ள பல வங்கிகள், தங்களின் வாடிக்கையாளர்கள், பணத்தை எளிதில் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு வசதியாக, பல்வேறு வகையான,கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வழங்கியுள்ளன.இதனால்,கடந்த சில வருடங் களாக காசோலை வாயிலாக மேற்கொள்ளப் படும் பரிவர்த்தனை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற 2010-11ம் முழு நிதியாண்டில், காசோலை வாயிலாக,1 கோடியே 1 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, பரி வத்தனை நடந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, 2.6 சதவீதம் குறைவாகும்.மேலும் இதே ஆண்டுகளில், டில்லி, பெங்களூரு ஆகிய இரு நகரங்களில் தான், காசோலை வாயிலான பண பரிவர்த்தனை அதிகளவில் நடைபெற்றுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|