பதிவு செய்த நாள்
16 நவ2011
03:11

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. மதியம் வரை அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்த பங்கு வியாபாரம்,ஐரோப்பிய பங்குச் சந்தைகளில்,வர்த்தகம் சுணக்கம் அடைந்ததையடுத் தும், பல நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை செயல்பாடு சரிவடைந்ததை அடுத்தும், மதியத்திற்கு பிறகு பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனங்கள், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, நேற்று, 50.67 ரூபாயாக மேலும் சரிவடைந்தது. இதனால், இறக்குமதி சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந்து போனது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ்:கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இழப்பை கண்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு,அதிக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில்,இந்நிறுவனத்திற்கு கடன் கொடுத்த வங்கிகளுக்கு, இந்நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா, இவருடைய குழும நிறுவனங்களுள் ஒன்றான, யுனைடட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் இவர் கொண்டுள்ள பங்குகளை, பிணையமாக அளித்துள்ளார். இதையடுத்து, யுனைடட் புருவரீஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனப் பங்கின் விலை குறைந்து போனது. இருப்பினும், வர்த்தகம் முடியும் போது, இதன் பங்கின் விலையும், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனப் பங்கின் விலையும் சற்று அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 236.07 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 16,882.67புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,172.09 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,837.56 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும்30 நிறுவனங்களுள், எச்.டி. எப்.சி. வங்கி, டாட்டா மோட்டார்ஸ், சிப்லா ஆகிய மூன்று நிறுவனங் கள் தவிர, ஏனைய 27 நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந்திருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 79.85 புள்ளிகள் குறைந்து, 5,068.50 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,158.75 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,052.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|