பதிவு செய்த நாள்
16 நவ2011
03:13

புதுடில்லி:நடப்பு 2011-12ம் காபி பருவத்தில்(அக்டோபர்-செப்டம்பர்),சர்வதேச அளவிலான காபி உற்பத்தி, 12. 74 கோடி மூட்டைகளாக (ஒரு மூட்டை=60 கிலோ)குறையும் என மதிப்பிடப் பட்டுள்ளது.இது,இதற்கு முந் தைய மதிப்பீட்டில், 13 கோடி மூட்டைகளாக இருக்கும் என, கணக்கிடப்பட்டிருந்தது. ஆக, தற்போது, 26 லட்சம் மூட்டை கள் குறையும் என, மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஆசியாவில் பருவ நிலை சாதகமாக இல்லாததே, இந்த உற்பத்தி குறைவிற்கு முக்கிய காரணம் என, சர்வதேச காபி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மோசமான பருவ நிலையால், காபி விளைச்சலில் எதிர்மறையான பாதிப்புகள் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள் ளது.இது, காபி ஏற்றுமதி செய்யும் நாடுகளை குறிப்பாக, மத்திய அமெரிக்கா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடு களை மிகவும் பாதிப்பதாக அமையும் என, சர்வதேச காபி கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
ஆசியாவை பொறுத்தவரை, காபி அதிகம் விளையும் நாடுகளான, வியட்நாம், இந்தோனேஷியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இதன் உற்பத்தி குறையும் என, மதிப் பிடப்பட்டுள்ளது.இது தவிர, மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில், அதிகள விலான மழை பொழிவு காரணமாக,காபி உற்பத்தி சிறிதளவு குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
காபி உற்பத்தியில் முன்னிலையில் உள்ள பிரேசில் நாட்டிலும், நடப்பு பருவத்தில் காபி உற்பத்தி குறையும் என மதிப் பிடப்பட்டுள்ளது.சென்ற 2010-11ம் பருவத்தில், ஆப்ரிக்காவில் காபி உற்பத்தி, 1.36 கோடி மூட்டைகளாக இருந்தது. இது, நடப்பு பருவத்தில், 19.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.63 கோடி மூட்டைகளாக உயரும் என, சர்வதேச காபி கூட்டமைப்பு கணித்துள்ளது.
சென்ற 2010-11ம் பருவத்தில், உலகளவில் காபி உற்பத்தி, 13.32 கோடி மூட்டைகளாக இருக்கும் என மதிப் பிடப்பட்டுள்ளது. இதில், 8.32 கோடி மூட்டைகள் அரபிகா வகை காபியும், 5 கோடி டன் ரோபஸ்டா வகை காபியும் அடங்கும் என, சர்வதேச காபி கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|