பதிவு செய்த நாள்
17 நவ2011
01:27

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், உள்நாட்டில், 3 கோடியே 55 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 3.1 சதவீதம் (3 கோடியே 44 லட்சம் டன்) அதிகம்.சென்ற செப்டம்பர் மாதத்தில், 56 லட்சத்து 64 ஆயிரம் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இது, கடந்த நிதியாண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 0.1 சதவீதம் (56 லட்சத்து 49ஆயிரம் டன்) குறைவாகும். அதே சமயம், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், இதன் உற்பத்தி 3.1 சதவீதம் உயர்ந்து, 50 லட்சத்து 86 ஆயிரம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது.பொதுத் துறையைச் சேர்ந்த செயில் நிறுவனம்,சென்ற செப்டம்பர் மாதத் தில்,10.63 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற் பத்தி யை விட, 1.8 சதவீதம் (10.82 லட்சம் டன்) குறைவு.
இதே மாதங்களில், டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தி, 4 சதவீதம் சரிவடைந்து, 5.32 லட்சம் டன்னாகவும் ( 5.54 லட்சம் டன்), ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, 9.3 சதவீதம் சரிவடைந்து, 4.09 லட்சம் டன்னா கவும் (5.40 லட்சம் டன்) குறைந்துள்ளது.இருப்பினும் இதே மாதங்களில், ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் (ஆர்.ஐ.என்.எல்) நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, 1.9 சதவீதம் வளர்ச்சியடைந்து, 2.68 லட்சம் டன்னாகவும் (2.63 லட்சம் டன்), எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, 22.5 சதவீதம் உயர்ந்து, 3.48 லட்சம் டன்னாகவும் ( 2 லட்சத்து 84 ஆயிரம் டன்), ஜிந்தால் ஸ்டீல் (ஜே.எஸ்.பி.எல்.) நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, 6.7 சதவீதம் வளர்ச்சியடைந்து, 1.91 லட்சம் டன்னாகவும் (1.79 லட்சம்) அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் கச்சா உருக்கு உற்பத்தி, சென்ற செப்டம்பர் மாதத்தில், 0.8 சதவீதம் குறைந்து, 25.66 லட்சம் டன்னிலிருந்து, 25.45 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இந்நிலையில் வரும்,12வது ஐந்தாண்டு திட்ட கால இறுதியில் (2016-17), உள்நாட்டில் உள்ள நிறுவனங்களின்,உருக்கு உற்பத்தி, 11.30 கோடி டன்னாக இருக்கும் என,மத்திய உருக்கு அமைச் சகத்தின் செயலர் பி.கே.மிஸ்ரா தெரிவித்தார். 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், உள்நாட்டில் உருக்கு பொருள் களுக் கான, தேவை, 10.3 சதவீதம் என்றளவில் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு நிறுவனங்கள், உருக்கு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கும், தொழில்நுட்பத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இதனை அமல்படுத்தும் வகையில், உருக்கு அமைச் சகம் பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது என, மிஸ்ரா மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|