சரிவுடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்சரிவுடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் ... ஆர்.பி.பி.இன்ப்ரா புராஜக்ட்ஸ்வருவாய் 100 சதவீதம் உயர்வு ஆர்.பி.பி.இன்ப்ரா புராஜக்ட்ஸ்வருவாய் 100 சதவீதம் உயர்வு ...
இனி யூடியூப்பிலும் பணம் பண்ணலாம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2011
16:40

புதுடில்லி : சர்வதேச அளவில், வீடியோ பிரியர்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் யூடியூப், தற்போது பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. 2005ம் ஆண்டில், பே பால் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களால் துவங்கப்பட்ட இந்த சே‌வையின் மூலம், தமக்குப் பிடித்தமான வீடியோக்களை அப்லோட் செய்து பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதனை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பினை யூடியூப் வழங்கி வருகிறது. இதன்மூலம், வீடியோ பிரியர்களின் ஏகோபித்த ஆதரவினை, யூடியூப் பெற்றுள்ளது என்று கூறினால், அது மிகையல்ல. இந்நிலையில், மேலும் ஒரு வரப்பிரசாதமாக, யூடியூப், பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினையும் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசை நிறுவனங்கள், தங்களது வீடியோ படைப்புகளை யூடியூப் இணையதளத்தில் போஸ்ட் செய்து அதன்மூலம் வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியன் பெர்பாஃர்மிங் ரைட் சொசைட்டி நிறுவனம் (ஐபிஆர்எஸ்), யூடியூப்புடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

முன்னணி பாடலாசிரியர்களான ஜாவேத் அக்தர், பங்கஜ் உத்தாஸ் உள்ளிட்டோரும், முன்னணி இசை நிறுவனங்களான ஈரோஸ் மியூசிக் பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், எம்கே புரொடெக்சன்ஸ் உள்ளிட்ட 2,233 உறப்பினர்கள் இந்த இந்தியன் பெர்பாஃர்மிங் ரைட் சொசைட்டியில் உறுப்பினர்களாக உள்ளனர்.

தற்போதைய அளவில், யூடியூப் இணையதளத்தில் உள்ள விளம்பரங்களின் மூலம், அந்நிறுவனத்திற்கு வருமானம் கிடைத்து வருகிறது. ஐபிஆர்எஸ் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசை நிறுவனங்கள் தங்களது வீடியோ ப‌டைப்புகளை யூடியூப் இணையதளத்தில் போஸ்ட் செய்வதன் மூலம், அவர்களுக்கும் கணிசமான தொகை வழங்க யூடியூப் நிறுவனம் இசைவு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)