பதிவு செய்த நாள்
19 நவ2011
00:32

உலகளவில், அதிகமாக தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு என்ற சிறப்பை, இந்தியா பெற்றுள்ளது. இருந்தபோதிலும், நடப்பாண்டில் இந்தியாவில் தங்கத்திற்கானதேவை பெருமளவு குறைந்து வருகிறது.நடப்பு காலண்டர் ஆண்டில், சென்ற செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், உள்நாட்டில் தங்கத்திற்கானதேவை, 23 சதவீதம் குறைந்து, 264 டன்னில் இருந்து 203.3 டன்னாகக் குறைந்துள்ளது. இது, முந்தைய ஐந்து காலாண்டுகளில், காணப்படாத சரிவாகும்.அதே சமயம், மதிப்பின் அடிப்படையில், இது, 6.89 சதவீதம் உயர்ந்து, 1,041கோடி டாலர் என்ற அளவில் இருந்து, 1,112கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இருப்பினும், இதே காலத்தில், உலகளவில் தங்கத்திற்கானதேவை உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில், சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், தங்கத்திற்கானதேவை 4.16 சதவீதம் அதிகரித்து, 856.10 டன்னாக உயர்ந்துள்ளது. இது, மதிப்பின் அடிப்படையில், 44.52 சதவீதம் அதிகரித்து, 3,242கோடி டாலரில் இருந்து 4,685கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவில், தங்கத்திற்கானதேவை குறைந்து வரும் நிலையில், சீனாவில் இதற்கானதேவை அதிகரித்து வருகிறது. சீனாவில், சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், தங்கத்திற்கானதேவை 16 சதவீதம் உயர்ந்து, 165 டன்னில் இருந்து, 191 டன்னாக உயர்ந்துள்ளது.இது, மதிப்பின் அடிப்படையில், 60.86 சதவீதம் அதிகரித்து, 650கோடி டாலரில் இருந்து, 1,046கோடி டாலராக அதிகரித்துள்ளது என, உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இக்கவுன்சிலின் நிர்வாக இயக்குனர் அஜய் மித்ரா கூறுகையில், "டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளதால், தங்கம், வெள்ளி உள்ளிட்ட மதிப்பு மிகு உலோகங்களின் விலை உயர்ந்துள்ளது. இத்துடன், பணவீக்க உயர்வும், இந்தியாவை பாதித்துள்ளது.உணவுப் பொருட்கள், எரிபொருள், வீட்டு வசதிக் கடன்களுக்கான வட்டி உயர்வு உள்ளிட்டவற்றால், மக்களின் முதலீட்டு வருவாய் ”ருங்கியுள்ளது.
மேலும், அவர்களின் செலவழிப்பு வருவாயும், வெகுவாக குறைந்துள்ளது' என்று தெரிவித்தார்.இந்தியாவில், தங்கக் கட்டிகளுக்கானதேவை குறைந்து வரும் நிலையில், ஆவண வடிவில், அவற்றின் மீதுமேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களில், முதலீடு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக, தங்க பரஸ்பர நிதி (கோல்டு ஈ.டி.எப்.,) உள்ளிட்ட இதரத் திட்டங்களில்மேற்கொள்ளப்பட்ட முதலீடு, சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், 58 சதவீதம் உயர்ந்து 77.6 டன்னாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக, தங்க பரஸ்பர நிதி திட்டப் பிரிவில், தங்கத்திற்கானதேவை உயர்ந்து வருகிறது. இதுகுறித்து, இந்திய பரஸ்பர நிதி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பரஸ்பர நிதியங்கள், அவற்றின் பல்வேறு திட்டங்களின் கீழ் நிர்வகித்து வரும் சொத்துக்களில்,கோல்டு ஈ.டி.எப்., திட்டங்களின் பங்களிப்பு, 51 சதவீதம் (4,176கோடி ரூபாய்) என்ற அளவிற்கு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற செப்டம்பருடன் முடிந்த காலாண்டில், இந்தியாவில் தங்கத்தின் விலை, சென்ற ஆண்டு இதே காலாண்டை விட, 18.35 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, மதிப்பின் அடிப்படையில், 5.6 சதவீதம் உயர்ந்து 48 ஆயிரத்து 354கோடியில் இருந்து 51 ஆயிரத்து 28கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், சீனாவின் யுவான் கரன்சியின் மதிப்பு, 1.28 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த சாதகமான சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், சீனா, அதன் கையிருப்பில் உள்ள கரன்சிகளைக் கொண்டு, தங்கத்தை வாங்கி வருகிறது.சென்ற 2010ம் ஆண்டு, செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், சீனாவில் தங்கத்திற்கானதேவை, 165 டன்னாக இருந்தது.
இதே காலத்தில், இந்தியாவில் தங்கத்திற்கானதேவை, 264 டன் என்ற அளவில் உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களில், தங்கம் விலையில் அதிக ஏற்ற,இறக்கம் இருந்தது. பொதுவாக, இந்த காலங்களில், தங்கம் விலையில் 15-25 சதவீதம் வரை உயர்வு தாழ்வு இருக்கும். ஆனால், நடப்பாண்டு, இதே மாதங்களில், 32 மற்றும் 34 சதவீத அளவிற்கு, ஏற்ற, இறக்கம் காணப்பட்டது.இதே மாதங்களில், அளவின் அடிப்படையில், தங்க ஆபரணங்கள் விற்பனை, 26 சதவீதம் சரிவு கண்டு, 168 டன்னில் இருந்து 125 டன்னாக குறைந்துள்ளது. இதே காலத்தில், தங்க ஆபரணங்கள் மீதான முதலீடு, 18 சதவீதம் சரிவடைந்து, 95.5 டன்னிலிருந்து 78 டன்னாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|