பதிவு செய்த நாள்
19 நவ2011
09:29

பெங்களூரு : அமெரிக்க விமானங்களில் பயணம் செய்வோர், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் காவேரி டெலிகாம் நிறுவனத்திற்கு நன்றி செலுத்திய வண்ணம் உள்ளனர். ஏனெனில், விமானத்தில் பயணம் செய்யும் போது, இணையதள சேவை கிடைக்காதது வளர்ந்த நாடுகளில் பெரும் பிரச்னையாக இருந்தது. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, விமானத்தில் பயணம் செய்யும் போது, இணையதள சேவையை பெறும் பொருட்டு புது வகை ஆண்டெனாக்களை காவேரி டெலிகாம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதோடு நின்றுவிடமால், இந்த தொழில்நுட்பத்தை, அமெரிக்க விமான நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த திட்டமி்ட்டுள்ளதாக காவேரி டெலிகாம் நிறுவன நிறுவனரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான சிவகுமார் ரெட்டி தெரிவித்தார். தங்கள் நிறுவன ஆண்டெனாக்கள், விமானங்கள் செல்லும் பாதையில் நிறுவப்படும் என்றும், இணையதள சேவை, 5 மணிநேரத்திற்கு 10 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|