பதிவு செய்த நாள்
20 நவ2011
15:33
மும்பை : கிரேன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான அனுபம் இண்டஸ்ட்ரீஸ், இந்த தனது வருமானத்தை ரூ.400 கோடியாக அதிகரிக்கவும், அடுத்த 3 ஆண்டுகளில் தனது விற்பனையை இரட்டிப்பாக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது ரூ.400 கோடி வருமானம் என்ற இலக்கு, அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.700 கோடி முதல் ரூ.800 கோடியாக அதிகரிக்கப்பட உள்ளதாக அனுபம் இண்டஸ்ட்ரீஸ் மேலாண் இயக்குனர் மெகுல் பட்டேல் தெரிவித்துள்ளார். இருப்பினும் தமது விரிவாக்க திட்டங்கள் குறித்து தெரிவிக்க பட்டேல் மறுத்துள்ளார். கடந்த ஆண்டு அனுபம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் விற்பனை அதிகரித்ததன் காரணமாக அதன் வருமானம் ரூ.300 கோடியை எட்டியது. இதனால் இந்த ஆண்டு பணிகளுக்காக இந்நிறுவனம் ரூ.50 கோடியை முதலீடு செய்துள்ளது. தற்போது லத்தின் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வரும் அனுபம் நிறுவனம் மேலும் பல நாடுகளில் தனது ஏற்றுமதி வர்த்தகத்தை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|