பதிவு செய்த நாள்
22 நவ2011
14:27
புதுடில்லி : ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேனான் நிறுவனத்தின் இந்திய அங்கமான கேனான் இந்தியா நிறுவனம், நாட்டின் நடுத்தர மற்றும் சிறு நகரங்களில் கேனான் பிரத்யேக ரீடெயில் ஸ்டோரை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த கேனான் இந்தியா நிறுவன தலைவரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கென்சாகு கொனிஷி கூறியதாவது, நிறுவனத்தின் ஆண்டு வருமானம் தற்போதைய அளவில், ரூ. 1,600 கோடியாக பதிவாகி உள்ளது. 2015ம் ஆண்டிற்குள், நிறுவன வருமானத்தை ரூ. 4,500 கோடி என்ற அளவிற்கு எட்ட தீர்மானித்திருப்பதாக தெரிவித்தார். அதன்காரணமாக, இந்தியாவின் சிறுநகரங்களிலும் வர்த்தகம் மேற்கொள்ள தி்ட்டமி்ட்டுள்ளோம். தற்போதைய அளவில், 95 என்ற அளவில் உள்ள கேனான் பிரத்யேக ரீடெயில் ஸ்டோரை, 300 என்ற அளவில் உயர்த்த தி்ட்டமிட்டுள்ளோம். இந்த புதிய ஸ்டோர்கள், நடுத்தர மற்றும் சிறு நகரங்களில் அமைக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|