ஆன்லைனில் கல்வி சேவை: பி.எஸ்.என்.எல்., அறிமுகம்ஆன்லைனில் கல்வி சேவை: பி.எஸ்.என்.எல்., அறிமுகம் ... விலை நிர்ணயத்தில் மத்திய அரசு விலகல் : உரம் விலை 70 சதவீதம் அதிகரிப்பு விலை நிர்ணயத்தில் மத்திய அரசு விலகல் : உரம் விலை 70 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ரோபஸ்டா காபி விலை வீழ்ச்சியால் ஏற்றுமதி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2011
02:04

புதுடில்லி:சர்வதேச சந்தையில் ரோபஸ்டா காபி விலை, 20 சதவீதத்திற்கும் மேலாக சரிவடைந்துள்ளதையடுத்து, இவ் வகை காபி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் மொத்த காபி ஏற்றுமதியில், ரோபஸ்டா வகை காபி பெரும் பான்மை பங்களிப்பை கொண்டுள்ளது. நடப்பு காலண்டர் ஆண்டில், நவம்பர் 18ம் தேதி நிலவரப்படி, 3 லட் சத்து 23 ஆயிரத்து 66 டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில், ரோபஸ்டா காபியின் பங்களிப்பு, 1 லட்சத்து 82 ஆயிரத்து 487 டன்னாக உள்ளது.

சர்வதேச அளவில் ரோபஸ்டா காபி உற்பத்தி, சாதனை படைக்கும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. ஆனால், இந்தியா வில் இதன் உற்பத்தி குறைந்துள்ளது. சென்ற காபி பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), இந்தியாவில் ரோபஸ்டா காபி உற்பத்தி, 2லட்சத்து 7ஆயிரத்து 860 டன்னாக இருக்கும் என, காபி வாரியம் மதிப்பிட்டுள்ளது.எனினும்,உற் பத்தி இதை விட அதிகமாக இருக்கும் என,விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், நடப்பு காபி பருவத்தில், ரோபஸ்டா காபி உற்பத்தி 20-30 சதவீதம் வரை குறையும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இந்தியாவில் ரோபஸ்டா காபி உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சர்வதேச அளவில் அதன் உற்பத்தி அதிகரித்துள்ளது. பிரேசில், வியட்நாம் நாடுகளில், ரோபஸ்டா காபி உற்பத்தி சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது. சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த காபி பருவத்தில், வியட்நாமின் காபி உற்பத்தி (1.70 கோடி முதல் 1.80 கோடி மூட்டைகள் (ஒரு மூட்டை-60 கிலோ) என்ற அளவில் உயர்ந்திருந்தது. இது, நடப்பு காபி பருவத்தில், 2.2 கோடி மூட்டைகளாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், சர்வதேச சந்தையில் ஒரு டன் ரோபஸ்டா காபி விலை, 2,000 டாலருக்கும் குறைவாக சரிவடைந்துள்ளதாலும்,வியட்நாம் நாடு, காபி ஏற்றுமதியை குறைத்துக் கொண்டுள்ளது.வழக்கமாக, இந்நாடு, ஜன வரிக்கு முன்பாக, அதன் மொத்த காபி உற்பத்தியில் 50 சதவீதத்தை ஏற்றுமதி செய்யும். ஆனால், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால், இந்நாடு அதன் ரோபஸ்டா காபி ஏற்றுமதியை குறைத்துக் கொண்டுள்ளது. தற்போது சர்வதேச முன்பேர சந்தையில், ஒரு டன் ரோபஸ்டா காபி விலை, 1,900 டாலர் என்ற அளவிற்கு குறைந்துள்ளது. அடுத்து வரும் மாதங்களில், வியட்நாமில் இருந்து அதிக அளவிலான காபி, சர்வதேச சந்தைக்கு வரும் என்பதால், இதன் விலை, மேலும் 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)