அன்னிய முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம் அன்னிய முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம் ... எல் அண்டு டி இன்ப்ரா கடன் பத்திரங்கள் வெளியீடு எல் அண்டு டி இன்ப்ரா கடன் பத்திரங்கள் வெளியீடு ...
பங்குச் சந்தையின் சுணக்க நிலையால் 25 நிறுவனங்களின் பங்கு வெளியீடு நிறுத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2011
00:08

புதுடில்லி: நடப்பு 2011ம் ஆண்டு தொடக்கம் முதல், இதுவரையிலுமாக, நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால், 25 நிறுவனங்கள் அவற்றின் பங்கு வெளியீடுகளை நிறுத்தி வைத்துள்ளதாக, எஸ்.எம்.சி. குளோபல் செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.நடப்பு 2011ம் ஆண்டு, ஜனவரி முதல் இதுவரையிலுமாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "சென்செக்ஸ்' 23 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்துள்ளது. குறிப்பாக, இம்மாதம், 23ம் தேதி "சென்செக்ஸ்' கடந்த 52 வாரங்களுக்கு பின், 15, 478.69 புள்ளிகளாக சரிவடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பாண்டில், மூலதனச் சந்தையில் களமிறங்கி, நிதி திரட்டும் வகையில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி' யிடம் அனுமதி பெற்ற, 25 நிறுவனங்கள், பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், அவற்றின் பங்கு வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ளன. இந்நிறுவனங்கள் அனைத்துமாக 31 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டிருந்ததாக, எஸ்.எம்.சி. குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.பொதுவாக, பங்கு வெளியீட்டிற்கு செபி அமைப்பிடம், அனுமதி பெற்ற தினத்திலிருந்து ஓராண்டிற்குள், நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில், நாட்டின் பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை ஒத்திப்போட்டும், நிறுத்தியும் வைத்துள்ளன.பங்கு வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ள 25 நிறுவனங்களுள், ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த, லோதா டெவலப்பர்ஸ், ஆம்பியன்ஸ் ரியல் எஸ்டேட், குமார் அர்பன் டெவலப்பர்ஸ், நெப்டியூன் டெவலப்பர்ஸ், பீ.பி.டி.பி., ரஹேஜா யுனிவர்சல் மற்றும் லவாசா கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் அடங்கும். இவை தவிர, மின்சார துறையில், ஸ்டெர்லைட் எனர்ஜி, ஜிந்தால் பவர், அவந்தா பவர் மற்றும் இந்த் பாரத் பவர் இன்ப்ரா ஆகிய நிறுவனங்களும் பங்கு வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ளன.நடப்பு நிதியாண்டில், மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள, மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், பொதுத் துறை நிறுவனங்களால் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, பொதுத் துறையைச் சேர்ந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது. ஆனால், பங்குச் சந்தை சாதகமாக இல்லாதததால், இதன் பங்கு வெளியீடு ஒத்திப்போடப்பட்டதுடன், தற்போது நிறுத்தியும் வைக்கப்பட்டுள்ளது.விரிவாக்கம் மற்றும் மூலதன தேவைக்காக, மூலதனச் சந்தையில் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள முடியாமல் உள்ளதால், பல நிறுவனங்களால், அவற்றின் விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ள முடியாமல் உள்ளது. இதனால், ஒட்டு மொத்த தொழில் துறையின் வளர்ச்சி தேக்கமடைந்துள்ளதுடன், வேலை வாய்ப்பும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என, எஸ்.எம்.சி.குளோபல் செக்யூரிட்டீஸ் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)