பதிவு செய்த நாள்
29 நவ2011
12:17

புதுடில்லி : அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கோட்டா முறையில் 18 ஆயிரம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்க உள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தலைநகர் டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் தாமஸ் கூறியதாவது, முன்னுரிமை கோட்டா அடிப்படையில், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு 10 ஆயிரம் டன் சர்க்கரையும், அமெரிக்காவிற்கு 8 ஆயிரம் டன் சர்க்கரையும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. 2010-11ம் நிதியாண்டில், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு 10 ஆயிரம் டன்னும், அமெரிக்காவிற்கு 8,200 டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த மாதம், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெற்ற அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில், ஓபன் ஜெனரல் லைசென்ஸ் முறையின் மூலம், 1 மில்லியன் டன் சர்க்கரையை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது என அவர் கூறினார். இந்தியா, சர்வதேச அளவில், இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாகவும் மற்றும் சர்க்கரையை பயன்படுத்தும் நாடுகளில் முனன்ணி இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|