ஒரு சவரன் தங்கம்ரூ.22 ஆயிரத்தை தாண்டியதுஒரு சவரன் தங்கம்ரூ.22 ஆயிரத்தை தாண்டியது ... அயல்நாடு வாழ் இந்தியர்கள் கடன் வாங்கி முதலீடு:இந்தியாவில் அதிக ஆதாயம் கிடைப்பதால்... அயல்நாடு வாழ் இந்தியர்கள் கடன் வாங்கி முதலீடு:இந்தியாவில் அதிக ஆதாயம் ... ...
உணவுப் பொருள் பணவீக்கம் 8 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2011
00:32

புதுடில்லி:நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், நவ., 19ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 8 சதவீதமாக வீழ்ச்சிகண்டுள்ளது. இது, சென்ற மாதம் 12ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 9.01 சதவீதமாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது. ஆக, கணக்கீட்டு செய்யப்பட்ட வாரத்தில், உணவுப் பொருள் பணவீக்கம், 1.01 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கணக்கீடு செய்வதற்கு எடுத்து கொள்ளப்பட்ட வாரத்தில், வெங்காயம் விலை, 40.65 சதவீதம் குறைந்துள்ளது. இது தவிர, உருளைக்கிழங்கு (10.98 சதவீதம்), கோதுமை (4.71 சதவீதம்) ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது.
அதேசமயம், ஆண்டுக் கணக்கின் அடிப்படையில், பெரும்பாலான உணவுப் பொருட்களின் விலை, மிகவும் அதிகரித்தே காணப்பட்டது.குறிப்பாக, பருப்பு வகைகளின் விலை, 13.80 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது. பால் (11.41 சதவீதம்), மீன், முட்டை, இறைச்சி (13.55 சதவீதம்) ஆகியவற்றின் விலையும் உயர்ந்திருந்தது.கடந்த சில மாதங்களாக காய்கறி விலை, இரட்டை இலக்க அளவிற்கு உயர்ந்து காணப்பட்டது. ஆனால், தற்போது இதன் விலை, 5.13 சதவீதம்மட்டுமே அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, தற்போதைய பணவீக்கம் கணிசமான அளவிற்கு குறைந்துள்ளது.
இது தவிர, பழங்கள் விலை 7.98 சதவீதமும், உணவு தானியங்கள் விலை 1.97 சதவீதமும் உயர்ந்திருந்தது.முக்கிய பொருட்களுக்கான பணவீக்கம், 7.74 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, இதற்கு வாரத்தில் 9.08 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. மொத்த விலைக் குறியீட்டு எண்ணை கணக்கிடுவதில், முக்கிய பொருட்களின் பங்களிப்பு, 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.உணவு சாரா பிரிவில், நூலிழை, எண்ணெய் வித்துக்கள் மற்றும் தாதுப் பொருட்களின் விலை, 2.15 சதவீதம் குறைந்துள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 4.05 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது.கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான பணவீக்கம், 15.33 என்ற அளவில் உள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 15.49 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.9 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம், கணிசமாக குறைந்துள்ளது, இது, ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும், சற்று ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
இது குறித்து, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவிக்கையில், "உணவு பணவீக்கம் குறைந்துள்ளது, மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.வரும், மார்ச் மாத இறுதிக்குள் நாட்டின் பொதுப் பணவீக்கம், 6 முதல் 7 சதவீதம் என்ற அளவில்கட்டுக்குள் வரும்' என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)