உணவுப் பொருள் பணவீக்கம் 8 சதவீதமாக சரிவுஉணவுப் பொருள் பணவீக்கம் 8 சதவீதமாக சரிவு ... அயல்நாடு வாழ் இந்தியர்கள் கடன் வாங்கி முதலீடு:இந்தியாவில் அதிக ஆதாயம் கிடைப்பதால்... அயல்நாடு வாழ் இந்தியர்கள் கடன் வாங்கி முதலீடு:இந்தியாவில் அதிக ஆதாயம் ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நவம்பர் மாதத்தில் வாகனங்கள் விற்பனை சிறப்பான அளவில் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2011
00:34

சென்னை:நடப்பாண்டு நவம்பர் மாதத்தில், ஒட்டுமொத்த அளவில், வாகனங்கள் விற்பனை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் மானேசர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இந்நிறுவனத்தின் வாகன விற்பனை மட்டும் குறைந்துள்ளது.பெட்ரோலிய பொருள்கள் மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்வால், கடந்த ஒரு சில மாதங்களாக, உள்நாட்டில் வாகன விற்பனை வளர்ச்சிமிகவும் சரிவடைந்திருந்தது. மேலும், வட்டி விகித அதிகரிப்பால், வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கையும் குறைந்திருந்தது.இந்நிலையில், சென்ற நவம்பர் மாதத்தில், டாட்டா மோட்டார்ஸ், மகிந்திரா, நிசான், ஹூண்டாய், டி.வி.எஸ்.மோட்டார் மற்றும் ஹீரோ ஹோண்டா போன்ற நிறுவனங்களின் வாகன விற்பனை சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.
டாட்டா மோட்டார்ஸ்சென்ற நவம்பர் மாதத்தில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், 76 ஆயிரத்து 823 வர்த்தக மற்றும் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 41 சதவீதம் அதிகமாகும். இந்நிறுவனம் உள்நாட்டில்,72 ஆயிரத்து 474 வர்த்தக மற்றும் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.இது, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 44சதவீதம் (50 ஆயிரத்து 419 வாகனங்கள்) அதிகமாகும்.நடப்பாண்டில், நவம்பர் மாதம் வரையிலுமாக இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனை (ஏற்றுமதி உள்பட) 5 லட்சத்து 44 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது.
இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 9 சதவீதம் (4 லட்சத்து 99 ஆயிரத்து 510 வாகனங்கள்) அதிக மாகும்.நிசான் மோட்டார்:சென்னை - ஒரகடத்தில், தொழிற்சாலைக் கொண்டு செயல்பட்டு வரும் நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின், கார் விற்பனை, சென்ற நவம்பர் மாதத்தில், கடந்த ஆண்டின் இதே மாத விற்பனையை விட, 149 சதவீதம் அதிகரித்துள்ளது.சென்ற நவம்பர் மாதத்தில், இந்நிறுவனம், 1,131 சன்னி வகை சேடன் கார்களை விற்பனை செய்துள்ளது. இப்புதிய கார்கள் நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆக, மூன்று மாத காலத்தில், 3,130 சன்னி சேடன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.சென்ற நவம்பர் மாதத்தில், இந்நிறுவனத்தின் சிறிய வகை மைக்ரா கார் விற்பனை, கடந்த ஆண்டின் இதே மாத விற்பனையை விட, 47 சதவீதம் அதிகரித்து, 1,514 ஆக வளர்ச்சிகண்டுள்ளது.
மாருதி சுசூகி இந்தியா:மாருதி சுசூகி இந்தியா, சென்ற நவம்பர் மாதத்தில், 91 ஆயிரத்து 772 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 18.46 சதவீதம் (1 லட்சத்து 12 ஆயிரத்து 554 வாகனங்கள்) குறைவாகும்.இதே காலத்தில், இந்நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனை, 19.15 சதவீதம் குறைந்து, 1 லட்சத்து, 2 ஆயிரத்து, 503 என்ற எண்ணிக்கையிலிருந்து, 82 ஆயிரத்து 870 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே போல், இதன் வாகன ஏற்றுமதியும் 11.43 சதவீதம் சரிவடைந்து, 10 ஆயிரத்து 051 லிருந்து, 8,902 ஆக குறைந்துள்ளது.
மகிந்திரா:மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், நவம்பர் மாதத்தில், 40 ஆயிரத்து 722 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 52.71 சதவீதம் (26 ஆயிரத்து 666 வாகனங்கள்) அதிகமாகும்.இதே மாதங்களில், இந்நிறுவனத்தின் உள்நாட்டு வாகனங்கள் விற்பனை 51.63 சதவீதம் வளர்ச்சி கண்டு, 25 ஆயிரத்து 166 வாகனங்கள் என்ற எண்ணிக்கையிலிருந்து, 38 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.பயணிகள் வாகனங்கள் விற்பனை, 44.55 சதவீதம் வளர்ச்சியடைந்து, 12 ஆயிரத்து 323 என்ற எண்ணிக்கையிலிருந்து, 17 ஆயிரத்து 813 ஆக உயர்ந்துள்ளது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, 31.80 சதவீதம் வளர்ச்சிகண்டு, 4,468 என்ற எண்ணிக்கையிலிருந்து, 5,889 ஆக அதிகரித்துள்ளது.இதே மாதங்களில், இந்நிறுவனத்தின் ஏற்றுமதி, 70.87 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1,500 என்ற எண்ணிக்கையிலிருந்து, 2,563 ஆக உயர்ந்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார்:சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில், தொழிற்சாலை கொண்டுள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சென்ற நவம்பர் மாதத்தில், 57 ஆயிரத்து 80 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 28.1 சதவீதம் (44 ஆயிரத்து 540 கார்கள்) அதிகமாகும்.இந்தியாவில் கார்கள் உற்பத்தியில், இரண்டாவது இடத்திலும், ஏற்றுமதியில் முன்னணியிலும் உள்ள இந்நிறுவனம், சென்ற நவம்பர் மாதத்தில், உள்நாட்டில், 35 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது.
இது, கடந்த ஆண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 10.9 சதவீதம் (31 ஆயிரத்து 540 கார்கள்) அதிகமாகும். இதே மாதங்களில், இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி, 69.80 சதவீதம் வளர்ச்சிகண்டு, 13 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 22 ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது.டி.வி.எஸ்.மோட்டார் :டி.வி.எஸ்.மோட்டார் கம்பெனி, சென்ற நவம்பர் மாதத்தில், 1 லட்சத்து 75 ஆயிரத்து 535 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 12 சதவீதம் (1லட்சத்து 57 ஆயிரத்து 41 வாகனங்கள்) அதிகமாகும்.இந்நிறுவனம், சென்ற நவம்பர் மாதத்தில், 1 லட்சத்து 72 ஆயிரத்து 829 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இது, கடந்த ஆண்டு நவம்பர் மாத விற்பனையை விட, 12 சதவீதம் (1 லட்சத்து 53 ஆயிரத்து 882 வாகனங்கள்) அதிக மாகும். இதே மாதங்களில், இந்நிறுவனத்தின் வாகனங்கள் ஏற்றுமதி, 53 சதவீதம் வளர்ச்சி கண்டு, 24 ஆயிரத்து 271 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, சென்ற நவம்பர் மாதத்தில், 2,706 ஆக குறைந்துள்ளது.பெட்ரோல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வால், கடந்த ஒரு சில மாதங்களாக, உள்நாட்டில் வாகன விற்பனை வளர்ச்சி மிகவும் சரிவடைந்திருந்தது. வட்டி விகித அதிகரிப்பாலும், வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்திருந்தது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)