பதிவு செய்த நாள்
02 டிச2011
00:39

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வியாழக் கிழமையன்று சிறப்பாக இருந்தது. காலையில், பங்கு வர்த்தகம் தொடங்கிய ஒரு சில நொடிகளில், 'சென்செக்ஸ்' 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்தது.அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள், கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. இதனால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்றைய வர்த்தகத்தில், உலோகம், வங்கி, மருந்து, மின்சாரம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 359.99 புள்ளிகள் அதிகரித்து, 16,483.45 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 16,718.11 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,430.61 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 25 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 5 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 104.80 புள்ளிகள் உயர்ந்து, 4,936.85 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 5,011.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,916.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|