பதிவு செய்த நாள்
03 டிச2011
01:04

சென்னை:ரியல் எஸ்டேட் மற்றும் துறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மார்க் நிறுவனம், 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை, கர்நாடக அரசுடன் செய்து கொண்டுள்ளது.இதன்படி, பல்வேறு வேளாண் அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள், கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் உள்நாட்டு வேளாண் தொழில்களை மேம்படுத்தும் வகையில், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்குள், 4,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய, இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.இந்த ஒப்பந்தத்தின் மூலம், நகரத்தில் உள்ள அனைத்து வசதிகளும், கிராமப்புறங்களிலும் ஏற்படுத்தப்படும். குறிப்பாக, குளிர்சாதனக் கிடங்கு, தொடர் அளிப்பு மேலாண்மை மற்றும் சேமிப்புக் கிடங்கு ஆகியவை, இவற்றில் அடங்கும்.இந்நிறுவனம், ஏற்கனவே, பெல்லாரி மற்றும் பிஜப்பூர் விமான நிலையங்களை மேம்படுத்த,கர்நாடக மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|