பதிவு செய்த நாள்
03 டிச2011
01:09

புதுடில்லி:பஜாஜ் ஆட்டோ நிறுவனம், சென்ற நவம்பர் மாதத்தில், 3 லட்சத்து 31 ஆயிரத்து 967 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 25 சதவீதம் ( 2 லட்சத்து 65 ஆயிரத்து 36 வாகனங்கள்) அதிகமாகும்.இதே மாதங்களில், இந்நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை, 25 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2 லட்சத்து 99 ஆயிரத்து 231 என்ற எண்ணிக்கையிலிருந்து, 3 லட்சத்து 74 ஆயிரத்து 477 ஆக அதிகரித்துள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை, 24 சதவீதம் வளர்ச்சியடைந்து, 34 ஆயிரத்து 195 என்ற எண்ணிக்கையிலிருந்து, 42 ஆயிரத்து 510 ஆக உயர்ந்துள்ளது.இந்நிறுவனத்தின் வாகனங்கள் ஏற்றுமதி, 42 சதவீதம் வளர்ச்சி கண்டு, 90 ஆயிரத்து 869 என்ற எண்ணிக்கையிலிருந்து, 1 லட்சத்து 29 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|