பதிவு செய்த நாள்
03 டிச2011
01:12

புதுடில்லி:இழப்பைக் கண்டு வரும், 3 பொதுத்துறை நிறுவனங்களில், மத்திய அரசு அதன் பங்குகளை விற்பனை செய்து விட்டு, வெளியேற முடிவு செய்துள்ளது.இது குறித்து, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், துறை அமைச்சர்பிரபுல் படேல் பார்லிமெண்டில் தெரிவித்துள்ள விவரம்:உள்நாட்டில் நீர் வழி சரக்குப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும், சென்ட்ரல் இன்லேண்டு வாட்டர் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், ஸ்கூட்டர்தயாரிப்பில் ஈடுபட்ட ஸ்கூட்டர்ஸ் இந்தியா, டயர் தயாரிப்பு வர்த்தகம் புரியும் டயர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்கள், இழப்பை சந்தித்து வருகின்றன.
இதனால் இந்நிறுவனங்களில், மத்திய அரசு கொண்டுள்ள பங்குகளை விற்பனை செய்ய பொதுத்துறை நிறுவனங்கள் சீரமைப்பு வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று, ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி, சென்ட்ரல் இன்லேண்டு வாட்டர் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில், மத்திய அரசு கொண்டுள்ள, 100சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படும். அது போன்று மேற்கு வங்கத்தை சேர்ந்த டயர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், அனைத்து பங்குகளும் விற்பனை செய்யப்படும்.
இது தவிர, ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில், மத்திய அரசு கொண்டுள்ள, 95.38 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்ற 2009-10ம் ஆண்டில், பொதுத்துறையை சேர்ந்த, 59 நிறுவனங்கள், 15 ஆயிரத்து, 842 கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|