பதிவு செய்த நாள்
03 டிச2011
01:15

சென்னை:இந்தியன் பேங்க், அமெரிக்க டாலரில் மேற்கொள்ளப்படும், ஓராண்டு முதல் இரண்டுஆண்டுகள் வரையிலான எப்.சி.என்.ஆர் (பீ) டெபாசிட்டிற்கு அளிக்கும் வட்டியை 2.19 சதவீதத்தில் இருந்து 2.32 சதவீதமாக உயர்த்தியுள்ளது.2-3 ஆண்டுகளுக்கு குறைவான டெபாசிட்டிற்கு, வட்டி 2.01 சதவீதமாகவும் (1.86 சதவீதம்), 3-4 ஆண்டுகளுக்கு உட்பட்ட டெபாசிட்டிற்கு 2.14 சதவீத (2.02 சதவீதம்) வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4-5 ஆண்டுகளுக்கான டெபாசிட்டிற்கு 2.35 சதவீதமும் ( 2.30 சதவீதம்), ஐந்தாண்டுகளுக்கான டெபாசிட்டுகளுக்கு 2.59 சதவீத (2.62 சதவீதம்) வட்டியும்நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட என்.ஆர்.ஈ டெபாசிட்டுகளுக்கான வட்டி 3.69 சதவீதத்தில் இருந்து 3.82 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2-3 ஆண்டுகளுக்கான டெபாசிட்டுகளுக்கான வட்டி 3.51 சதவீதமாகவும் (3.36 சதவீதம்), 3-5 ஆண்டுகளுக்கான டெபாசிட்டுகளுக்கு 3.64 சதவீத (3.52 சதவீதம்) வட்டியும்நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், அன்னியச் செலாவணி வரத்தை அதிகரிக்கும் நோக்கில், வங்கிகளில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு கரன்சி வாயிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகித உச்சவரம்பை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.இதையடுத்து, இந்தியன் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ஆகியவையும்,அன்னியச் செலாவணி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|