பதிவு செய்த நாள்
03 டிச2011
01:17

புதுடில்லி:இந்தியா, வரும் 2012ம் ஆண்டில் 32 ஆயிரத்து 370 டன் மிளகு ஏற்றுமதி மேற்கொள்ளும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவில் மிளகு பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, மிளகு உற்பத்தி வளர்ச்சி இல்லை என, சர்வதேச மிளகு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு, நம் நாட்டின் மிளகு உற்பத்தி, 48 ஆயிரம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இறக்குமதிஅதே சமயம், மிளகிற்கான தேவை, 45 ஆயிரம் டன்னாக உயரும் என்று தெரிகிறது. நாட்டின் மிளகு இறக்குமதி, 14 ஆயிரம் டன்னாகவும், ஏற்றுமதி, 21 ஆயிரம் டன் என்ற அளவிலும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.பருவ நிலை மாற்றம், பூச்சித் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நம் நாட்டின் மிளகு உற்பத்தி, நடப்பாண்டை விட, வரும் 2012ம் ஆண்டில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மிளகுஉற்பத்தி, வரும் ஆண்டில் 5,000 டன் குறைந்து, 43 ஆயிரம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாண்டு இறுதி நிலவரப்படி, மிளகு உற்பத்தியில் உள்நாட்டு பயன்பாடு மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்டது போக, நாட்டின் மிளகு கையிருப்பு 15 ஆயிரத்து 370 டன்னாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த ஆண்டு தொடக்கத்தில், நாட்டின் மிளகு கையிருப்பு இந்த அளவிற்கும், மிளகு உற்பத்தி 43 ஆயிரம் டன்னாக இருக்கும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச உற்பத்திவரும் 2012ம் ஆண்டில், சர்வதேச மிளகு உற்பத்தி 3 லட்சத்து 20 ஆயிரம் டன்னாக இருக்கும் என சர்வதேச மிளகு கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. இது, முந்தைய மதிப்பீட்டில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 400 டன்னாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆக, உலகளவில் மிளகு உற்பத்தி, முந்தைய மதிப்பீட்டை விட 22 ஆயிரம் டன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளை மிளகு:இதில், வெள்ளை மிளகு உற்பத்தி 2 லட்சத்து 48 ஆயிரத்து 250 டன்னாகவும், கரு மிளகு உற்பத்தி 71 ஆயிரத்து 905 டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.உலகளவில், மிளகு உற்பத்தியில் வியட்நாம் முதலிடத்தில் உள்ளது. வியட்னாம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் மிளகு உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், சர்வதேச மிளகு உற்பத்தி, சென்ற ஆண்டை விட, வரும் ஆண்டில் 7.2 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.வரும் ஆண்டில், மிளகு உற்பத்தி நாடுகளின் உள்நாட்டு பயன்பாடு 1 லட்சத்து 24 ஆயிரத்து 870 டன்னாக இருக்கும். மிளகு ஏற்றுமதி, நடப்பாண்டை விட 4,205 டன் உயர்ந்து, 2 லட்சத்து 42 ஆயிரத்து 250 டன்னில் இருந்து 2 லட்சத்து 46 ஆயிரத்து 45 டன்னாக அதிகரிக்கும்.
நடப்பாண்டில்,வியட்நாம்1 லட்சத்து 10 ஆயிரம் டன் மிளகு உற்பத்தி செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டின் உற்பத்தியை விட 10 ஆயிரம் டன் அதிகமாகும். நடப்பாண்டில், வியட்நாம் 1 லட்சத்து 15 ஆயிரம் டன் மிளகு ஏற்றுமதி மேற்கொள்ளும்.அதே சமயம், இந்நாடு 20 ஆயிரம் டன் மிளகை இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டு இறுதி நிலவரப்படி, இந்நாட்டின் மிளகு கையிருப்பு 10 ஆயிரம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வரும் ஆண்டில், வியட்னாம் 1 லட்சத்து 20 ஆயிரம் டன் மிளகை ஏற்றுமதி செய்யும். ஆண்டு இறுதியில் இந்நாட்டின் மிளகு கையிருப்பு, நடப்பாண்டை விட 4,500 டன் அதிகரித்து 14 ஆயிரத்து 500 டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியா:இந்தோனேஷியாவின் மிளகு உற்பத்தி நடப்பாண்டு 33 ஆயிரம் டன்னாக இருக்கும். இது, வரும் ஆண்டில் 41 ஆயிரம் டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டில், இந்நாடு 28 ஆயிரத்து 500 டன் மிளகை ஏற்றுமதி செய்யும் என தெரிகிறது.இதே ஆண்டுகளில், மலேசியாவின் மிளகு உற்பத்தி 900 டன் உயர்ந்து, 25 ஆயிரத்து 600 டன்னில் இருந்து 26 ஆயிரத்து 500 டன்னாக அதிகரிக்கும்.சர்வதேச மிளகு கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத நாடுகளின் மிளகு உற்பத்தி, வரும் ஆண்டில் 47 ஆயிரம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|