பதிவு செய்த நாள்
03 டிச2011
01:20

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்றும் மிகவும் சிறப்பாக இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதையடுத்து, மதியத்திற்கு பிறகு, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது.இந்நிலையில், ஜெர்மன் நாட்டின் சான்ஸ்ஸிலர் ஏஞ்சலா மெர்கல், ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடிக்கு ஒன்றிணைந்து நிரந்தர தீர்வுக்கு வழி காண வேண்டும் என அறிவித்தார். இதையடுத்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் பங்கு வியாபாரம் நன்கு இருந்தது.ஆனால், எஸ்.எம்.சி. குளோபல் நிறுவனத்தின், தலைமை அதிகாரி ஜெகன்நாதன் துனுகுன்டலா கூறுகையில், 'தற்போதைய பங்கு வர்த்தக உயர்வு என்பது நீர்க்குமிழி போன்றதாக உள்ளது. அடிப்படை காரணிகள் நன்கு இல்லை.
இதனால், எந்தவொரு நேரத்திலும் பங்கு வர்த்தகம் வீழ்ச்சி காண வாய்ப்புள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்' என்று தெரிவித்தார்.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில் வங்கி, உலோகம், தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 363.38 புள்ளிகள் அதிகரித்து, 16,846.83 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,888.84 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 16,428.66 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தவிர, ஏனைய 29 நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 113.30 புள்ளிகள் உயர்ந்து, 5,050.15 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,062.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,918.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|