பதிவு செய்த நாள்
03 டிச2011
09:06

மும்பை : கம்ப்யூட்டர் சிப்கள் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக விளங்கும் இன்டெல் நிறுவனம், ஆட்டம் புராசசர்களுடன் ஸ்மார்ட்போன்கள் வர்த்தகத்தில் அடுத்த ஆண்டில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இன்டெல் நிறுவன புராசசர்களுடன் கூகுள் டிவி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது, அதுமட்டுமல்லாது, அல்ட்ராபுக்ஸ் மற்றும் டேப்லெட் பிசிக்களில் இந்த புராசசர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த இன்டெல் டெக்னாலஜி (இந்தியா மற்றும் தெற்காசியா) விற்பனை பிரிவு இயக்குனர் ரவிச்சந்திரன் கூறியதாவது, ஆட்டம் புராசசருடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் வர்த்தகத்தில், 2012ம் ஆண்டில் களமிறங்க இன்டெல் நிறுவனம் தீர்மானித்துள்ளது. தற்போதைய அளவில், இன்டெல் நிறுவன ஆட்டம் புராசசருடன் கூடிய ஏசர், ஆசஸ் மற்றும் லெனோவா பிராண்ட் அல்ட்ராபுக்குகளுககு மிகுந்த வரவேற்பு உள்ளது, இதனை கருத்தில் கொண்டு, மேலும் பல புது மாடல்களை வரும் காலங்களிலும் அறிமுகப்படுத்த உள்ளோம்.
ஸமார்ட்போன்கள் மற்றும் நோட்புக்களில், பணப் பரிமாற்ற வசதியை அறிமுகப்படு்ததும் பொருட்டு, மாஸ்டர்கார்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இன்டெல் ஐடென்டிடி புரொடெக்சன் என்று பெயரிடப்பட்டுள்ள இம்முறையின் மூலம், பாதுகாப்பான பணப் பரிமாற்றத்தை பெறுவதற்கான வாய்ப்பை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|