பதிவு செய்த நாள்
03 டிச2011
10:29

மும்பை : சூரிய சக்தியின் மூலம் இயங்கும் சோலார் உபகரணங்கள் வர்ததகத்தில் முன்னணியில் உள்ள சோலெக்ஸ் நிறுவனம், சோலேக்ஸ் ஐபிரிட் சோலார் ஏர் கண்டிஷனரை, இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த சோலெக்ஸ் குழும தலைவர் லட்சுமிநாராயணன் கூறியதாவது, மின் சக்தி மற்றும் சூரிய ஒளியில் இயங்கும் வகையில், இந்த ஏர்கண்டிஷனர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சோலார் ஏசியினுள் உள்ள சிறிய அளவிலான சோலார் பேனல், சூரிய ஒளியை உட்கிரகித்து அதனை மி்ன்சக்தியாக மாற்றி கருவியை இயங்கச் செய்கிறது. வீட்டின் மேல்தளம் சென்று இதை மாட்டவேண்டும் என்ற அவசியமில்லை, வீட்டின் வெளிப்புறத்தில் மாட்டினாலே இது போதுமானது. இந்த சோலார் ஏசியின் மூலம், 30 சதவீத மின் செலவை மிச்சப்படுத்தலாம். 0.75 டன் கொள்ளளவு கொண்ட ஏசியின் விலை ரூ. 45,000 என்ற அளவிலும், 1 டன் ஏசி ரூ. 52,000 மற்றும் 1.5 டன் ஏசி ரூ. 71,000 என்ற அளவிலும் கிடைக்கிறது. சோலார் ஏசி வர்த்தகத்தோடு நின்றுவிடாமல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இதுமட்டுமல்லாது, சோலார் தெருவிளக்குகள், லாந்தர்ன் விளக்குகள், சோலார் அக்குவா ஹீட்டர்கள், சோலார் ஹோம் லைட் சிஸ்டம், சோலார் சீலிங் ஃபேன் மற்றும் மினி வாஷிங் மெஷின் உள்ளிட்டவைகளையும் தங்கள் நிறுவனம் விற்பனை செய்து வருவதாக அவர் கூறினார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|