பதிவு செய்த நாள்
03 டிச2011
12:20

புதுடில்லி : காபி வர்த்தகத்தில், சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள குளோரியா ஜீன்'ஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள அவுட்லெட்களின் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிக்க திட்டமி்ட்டுள்ளது. இதுதொடர்பாக, தலைநகர் டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த குளோரியா ஜீன்'ஸ் நிறுவன மண்டல பொது மேலாளர் டோனி ஒயிட் கூறியதாவது, 2008ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் கால்பதித்த தங்கள் நிறுவனம், சிட்டிமேக்ஸ் இந்தியா நிறுவன உதவியுடன் முதற்கட்டமாக 4 அவுட்லெட்களை திறந்தது. தற்போதைய அளவில், 20 அவுட்லெட்களை நிர்வகி்த்து வருகிறோம். அடுத்த 12 மாதங்களுக்குள், அவுட்லெட்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். பெங்களூரு, சென்னை, ஐதராபாத், மும்பை மற்றும் டில்லி உள்ளிட்ட முன்னணி நகரங்கள் மற்றும் சண்டிகார், ஜெய்ப்பூர் மற்றும் புனே உள்ளிட்ட சிறுநகரங்களில் புதிய அவுட்லெட்கள் அமைய உள்ளது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் முதல் 3 இடங்களில் உள்ள தங்கள் நிறுவனம், இந்தியாவிலும் முன்னணி இடத்தைப் பிடிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|