பதிவு செய்த நாள்
03 டிச2011
13:51

நியூயார்க் : சமூக வலைதளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனம், நியூயார்க்கில் புதிய அலுவலகம் திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மேற்குபகுதியில் பேஸ்புக் அமைக்க உள்ள முதல் அலுவலகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பாலோ ஆல்டோ நகரில் துவங்கப்பட்ட பேஸ்புக் நிறுவனம், தற்போது அதே மாகாணத்தின் மென்லோ பார்க்கில் தலைமையகம் இயங்கி வருகிறது. பேஸ்புக் நிறுவனத்திற்கு மடிசன் அவென்யூவிலும் அலுவலகம் உள்ளது. 100 ஊழியர்களை கொண்டு, அட்வர்டைசிங் தொடர்பான பணிகள், இந்த அலுவலகத்தில் நடைபெற்று வருகி்ன்றன. நியூயார்க்கில் அமைய உள்ள புதிய அலுவலகத்தில், நியூஸ் ஃபீட், இன்ப்ராஸ்ட்ரெக்சர் பிஹைண்ட் டைம்லைன் உள்ளிட்ட பணிகள் இங்கு நடைபெற உள்ளன. இந்த புதிய அலுவலகம், 2012ம் ஆண்டின் முற்பகுதியில் செயல்பட உள்ளதாக நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|