பதிவு செய்த நாள்
03 டிச2011
15:48

மும்பை : வாகன உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம், 2012ம் ஆண்டிற்கான எக்ஸ்யூவி500 புக்கிங்கை ஜனவரியில் துவக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
2011ம் ஆண்டின் அக்டோபர் மாதம் 11ம் தேதி எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் யூடிலிட்டி கார் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட 10நாளிலேயே, 8 ஆயிரம் கார்களுக்கு முன்பதிவு முடிந்தது. இதனையடுத்து, முன்பதிவை மகிந்திரா நிறுவனம் உடனடியாக நிறுத்திக்கொண்டது.
இதுகுறித்து, மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் யூடிலிட்டி வாகனமான எக்ஸ்யூவி500 கார், மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட 10 நாட்களிலேயே, 8 ஆயிரம் கார்களுக்கு முன்பதிவு நடைபெற்றதே இதற்கு சான்று ஆகும். கார்களை உற்பத்தி செய்யும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குரஜாத் மாநிலன் சகான் உற்பத்தி யூனிட்டில் கார்களை உற்பத்தி செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
2012ம் ஆண்டிற்கான கார் புக்கிங் ஜனவரியில் துவங்க உள்ளது. ஜனவரியில் ஆகும் புக்கிங்களுக்கான கரர்கள், ஜனவரி மாதத்திலேயே டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|