பதிவு செய்த நாள்
03 டிச2011
16:36

புதுடில்லி : பஸ், டாக்சி, ஆட்டோரிக்ஷா மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரு அட்டையை வைத்து பயணம் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளிக்கிறது மத்திய நகர்ப்புர மேம்பாட்டுத்துறை அமைச்சகம். "காமன் மொபிலிட்டி கார்டு" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் புரோட்டோடைப்பை, தலைநகர் டில்லியில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கமல்நாத் வெளியிட்டார். வரும் காலங்களில், நகரங்களில் உள்ள மக்கள் பஸ், டாக்சி, ஆட்டோரிக்ஷா மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரே அட்டையை பயன்படுத்தி பயணம் செய்வதன் அடிப்படையிலேயே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை மேலும் விஸ்தரிக்கும் பொருட்டு, மாநில அரசுகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுடன், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட உள்ளது. இதுதொடர்பாக, மாநில அரசுகளளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் கார்டு வகையில் உருவாக்கப்பட உள்ள இந்த காமன்மொபிலிட்டி கார்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புழக்கத்தில் உள்ள பயண கட்டணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ளது. இந்த கார்டு, போக்குவரத்திற்கு மட்டும் பயனபடப் போவது மட்டுமல்லாது, சுங்கச்சாவடி வரி மற்றும் வாகன நிறுத்தம் கட்டணம் உள்ளிட்டவைகளுக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த காமன் மொபிலிட்டி கார்டின் மூலம், டிக்கெட்களை பிரிண்ட் செய்வதற்கான செலவு, பேப்பரின் செலவு மற்றும் பிரிண்ட் செய்வதற்கான செலவு உள்ளிட்டவைகள் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில், இந்த திட்டம் "ஆக்டோபஸ் கார்டு" என்ற முறையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|