பதிவு செய்த நாள்
04 டிச2011
12:49
புதுடில்லி : இந்தியாவில் வீடுகளில் உள்ள தங்கத்தின் மொத்த மதிப்பு 950 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. டாலரின் மதிப்பில் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம் ஆகும். இந்தியாவில் கலாச்சார மற்றும் பாரம்பரிய அடையாளமாக தங்கம் கருதப்படுவதால் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் தங்கம் அதிகம் வாங்கும் நாடாக இந்தியா உள்ளது. இந்திய விடுகளில் மட்டும் 18 ஆயிரம் டன் தங்கம் உள்ளதாகவும், இது உலகின் மொத்த தங்கத்தில் 11 சதவீதமாகும். 2009-10ம் ஆண்டில் இந்தியாவில் 329 பில்லியன் டாலர் அளவிற்கே தங்கம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்கத்தை வாங்கி சேமிப்பு மக்களிடம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு ஜனவரி முதல் 2011 செப்டம்பர் வரை சுமார் 64 சதவீதம் வரை தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 2011ம் ஆண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் தங்கத்தின் அளவு 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 2010 ல் அதிகபட்சமாக 72 சதவீதம் தங்கம் அளவு அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|