ஏற்றுமதி ரூ.9.63 லட்சம் கோடியாக உயர்வுஏற்றுமதி ரூ.9.63 லட்சம் கோடியாக உயர்வு ... ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது பானோசோனிக் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது பானோசோனிக் ...
நடப்பு 2011-12ம் பருவத்தில் காபி உற்பத்தி 3.22 லட்சம் டன்னாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2011
00:31

நடப்பு பருவத்தில், நாட்டின் காபி உற்பத்தி, 3 லட்சத்து 22 ஆயிரத்து 250 டன்னாக அதிகரிக்கும் என, காபி வாரியம் மதிப்பீடு செ#துள்ளது.உலகில் அதிகளவில் காபி உற்பத்தி செ#யும் நாடுகளில் ஒன்றாக, இந்தியா விளங்குகிறது. சென்ற 2010-11ம் ஆண்டின் காபி பருவத்தில், (அக்டோபர் - செப்டம்பர்) 3 லட்சத்து 2 ஆயிரம் டன் காபி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இது, நடப்பு 2011-12ம் ஆண்டு காபி பருவத்தில், 6.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3 லட்சத்து 22 ஆயிரத்து 250 டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் பெ#த மழைக்கு பிறகான ஈரப்பதம், காபி பயிர் செழித்து வளர்வதற்கு உதவி புரிந்துள்ளது. இதனால் நடப்பு காபி பருவத்தில், உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த காபி உற்பத்தியில், அரபிகா வகை காபி உற்பத்தி 11 சதவீதம் உயர்ந்து, சென்ற ஆண்டை விட 10 ஆயிரத்து 385 டன் அதிகரித்து, 1 லட்சத்து 4 ஆயிரத்து 525 டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரோபஸ்டா வகை காபி உற்பத்தி, 4.75 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2 லட்சத்து 17 ஆயிரத்து 725 டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, காபி வாரிய தலைவர் ஜாவத் அக்தர் தெரிவித்தார்.
நாட்டின், மொத்த காபி உற்பத்தியில், கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில், காபி விளையும் மூன்று மாவட்டங்களிலும் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இரு இடங்களில் கேரளம், தமிழகம் உள்ளன.ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில், புதிய பகுதிகளில் காபி பயிரிடப்பட்டு வருகிறது. காபி விளையும் பகுதிகளில் மிதமான மழையுடன், சாதகமான பருவ நிலை காணப்படுகிறது. இதனால், உற்பத்தியாகும் காபியின் தரம் சிறப்பாக உள்ளதால், நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில், அரபிகா வகை காபி 82 ஆயிரத்து 250 டன்னாகவும், ரோபஸ்டா வகை காபி 1 லட்சத்து 45 ஆயிரத்து 425 டன் என்ற அளவிலும், மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 675 டன் காபி உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கேரளாவிலும், காபி பயிர் வளர்வதற்கு சாதகமான சூழ்நிலை இருப்பதால், நடப்பு பருவத்தில் காபி உற்பத்தி, 5.3 சதவீதம் (3 ஆயிரத்து 475 டன்) வளர்ச்சி கண்டு, 69 ஆயிரத்து 125 டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் உற்பத்தி குறித்த, இறுதி மதிப்பீட்டை விட அதிகம்.
தமிழகத்திலும் காபி விளைச்சலுக்கு சாதகமான பருவ நிலை காணப்படுகிறது. இதனால், நடப்பு பருவத்தில் காபி உற்பத்தி, கடந்த பருவத்தை விட, 11.3 சதவீதம் (1,890 டன்) வளர்ச்சி கண்டு, 18 ஆயிரத்து 540 டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பருவத்தில், காபி உற்பத்தி, 16 ஆயிரத்து 650 டன்னாக இருக்கும் என, இறுதி மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிதாக காபி பயிரிடப்பட்டு வரும் ஆந்திரா, ஒடிசா மற்றும் வடகிழக்கு பகுதிகளில், அதன் உற்பத்தி, 6,910 டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பருவத்தில், காபி உற்பத்தி 5,920 டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், காபி உற்பத்தியில் ஆந்திரா முதலிடத்திலும், ஒடிசா இரண்டாவது இடத்திலும் உள்ளன. தென் மாநிலங்களை தவிர்த்து, வட மாநிலங்களிலும் காபி பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது. காபி பயன்பாட்டில், வடமாநிலங்கள், 40 சதவீத வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. மதிப்பு கூட்டப்பட்ட, காபி வகைகளின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதன் வாயிலாக, இத்துறையில் ஏராளமான வேலை வா#ப்பு பெருகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் டிசம்பர் 10,2011
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)