பதிவு செய்த நாள்
12 டிச2011
09:20

புதுடில்லி:பொதுத் துறை நிறுவனமான, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (பி.பி.எல்.,) கேரளா கொச்சியில், 6,000 கோடி ரூபாய் முதலீட்டில், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை அமைக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக, கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இதில், வெளிநாட்டு நிறுவனத்தின் பங்களிப்பும் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து, பாரத் பெட்ரோலியம் நிறுவன தலைவர் ஆர்.கே.சிங், மேலும் கூறுகையில், "நாட்டில், புரோபலின் டெரிவேட்டிவ் என்ற வேதியியல் கலவை, முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. கொச்சியில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் இது தயாரிக்கப்படும். இத்தொழிற்சாலைக்கான பணிகள், ஐந்தாண்டுகளில் முடிக்கப்பட்டு உற்பத்தி துவங்கும். தற்போது, கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், ஆண்டுக்கு 95 லட்சம் டன் எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் தான் உள்ளது. இது, ஒன்றரை கோடி டன்னாக உயர்த்தப்படும் என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|