பதிவு செய்த நாள்
12 டிச2011
14:18

புதுடில்லி : நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி 5.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது. பெரும்பாலான துறைகளில் குறிப்பாக உற்பத்தி, சுரங்கம் மற்றும் ஏற்றுமதி தொழிலில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட சரிவே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் தொழில்துறை உற்பத்தி 11.3 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையின்படி, ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தொழில் துறை உற்பத்தி 3.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் உற்பத்தி வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது. உற்பத்தி தொழில்களை பெருத்த வரை துவக்கத்தில் 75 சதவீதமாக இருந்த வளர்ச்சி அக்டோபரில் 6 சதவீதம் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|