பதிவு செய்த நாள்
13 டிச2011
00:09

புனே: புளோரிடா குழுமத்தைச் சேர்ந்த, கைனடிக் மோட்டார் கம்பெனி , கைனடிக் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைய முடிவு செய்துள்ளது. இதற்கு, இவ்விரு நிறுவனங்களின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளன. இதன்படி, கைனடிக் மோட்டார் கம்பெனியின், 31 பங்குகளுக்கு, கைனடிக் இன்ஜினியரிங் நிறுவனத்தின், 4 பங்குகள் என்ற விகித அடிப்படையில் வழங்கப்படும்.மேற்கண்ட இணைப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு, கைனடிக் இன்ஜினியரிங் நிறுவனத்தின், நிறுவனர்கள் கொண்டுள்ள பங்கு மூலதனம் 57.49 சதவீதத்தில் இருந்து, 52.85 சதவீதமாக குறையும். இந்த இணைப்பு நடவடிக்கை, 2012ம் ஆண்டு ஜன., 1ம் தேதி நடைமுறைக்கு வரும். நடப்பாண்டில், இந்நிறுவனத்தின் விற்றுமுதல், 125 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பினை அடுத்து, நிறுவனத்தின் விற்றுமுதல் அடுத்த, 4 ஆண்டுகளில், 500 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|