பதிவு செய்த நாள்
13 டிச2011
00:12

மும்பை: சென்ற அக்டோபர் மாதத்தில், கிரெடிட் கார்டு வாயிலான வர்த்தக மதிப்பு, 33.1 சதவீதம் அதிகரித்து 8,997 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், கிரெடிட் கார்டு வாயிலான பரிவர்த்தனை, 54 ஆயிரத்து 370 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட 30.1 சதவீதம் அதிகம்.அக்டோபரில், நாட்டில் உள்ள கிரெடிட் கார்டுகள் புழக்கம், 3.3 சதவீதம் குறைந்து,
1 கோடியே 76 லட்சமாக சரிவடைந்துள்ளது. இதே மாதங்களில், டெபிட் கார்டுகள் வாயிலான பரிவர்த்தனை, 50.5 சதவீதம் வளர்ச்சியடைந்து, 5,591 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. டெபிட் கார்டுகளின் புழக்கம், 22.80 சதவீதம் வளர்ச்சி கண்டு, 25 கோடியே 55 லட்சமாக உயர்ந்துள்ளது.ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை, 43.80 சதவீதம் உயர்ந்து, 20 ஆயிரத்து 176 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்ற 2010-11ம் முழு நிதியாண்டில், கிரெடிட் கார்டுகள் வாயிலான வர்த்தகம், 22.15 சதவீதம் உயர்ந்து, 75 ஆயிரத்து 516 கோடி ரூபாயாகவும், டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை மதிப்பு, 46.46 சதவீதம் அதிகரித்து, 38 ஆயிரத்து 692 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|