பதிவு செய்த நாள்
13 டிச2011
00:26

இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை, 18 - 28சதவீதம் வரைசரிவடைந்துள்ளது. அசையா சொத்துக்களின் விலை உயர்வு, வீட்டு வசதி கடனுக்கான வட்டி அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட காரணங்களால், வீடுகள் விற்பனைசரிவடைந்துள்ளதாக, ஆய்வு நிறுவனமான லையாசஸ் போராஸ் தெரிவித்துள்ளது.
நடப்பு 2011 - 12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில், டில்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் வீடுகள் விற்பனை குறைந்துள்ளது. குறிப்பாக, பெங்களூருவில், வீடுகள் விற்பனை, சென்ற நிதியாண்டின், இதே காலத்தை விட, 21சதவீதம்சரிவடைந்துள்ளது.
பணவீக்கம்
இது குறித்து, ஜோன்ஸ் லேங் லாசேல் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிசஞ்சய்தத் கூறும் போது, "டில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் வீடுகள் விலை, உச்சத்தை எட்டியுள்ளது. இதே போன்று, இரண்டாம் நிலை நகரங்களிலும் வீடுகளின் விலை, கிடு..கிடு..வென உயர்ந்துள்ளது.
இதனால், வீடு வாங்குவோர் எண்ணிக்கை, கடந்த 6 -12 மாதங்களில் வெகுவாக குறையத் தொடங்கியுள்ளது. சென்னை, புனே போன்ற நகரங்களில் வீடுகள் விற்பனைசரிவடைந்துள்ளது' என்று, தெரிவித்தார்.
பணவீக்கம், வட்டி உயர்வு ஆகியவை தான், வீடுகள் விற்பனைசரிவடைய காரணம். தற்போது, அதிக விலை கொண்ட குடியிருப்புகளுக்கு பதிலாக, நடுத்தர வருவாய்பிரிவினருக்கான குடியிருப்புகள் தான், விற்பனையாகின்றன என, அவர் மேலும் கூறினார். கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின், ஏராளமான கட்டுமான நிறுவனங்கள், உயர் வருவாய்பிரிவினருக்கான குடியிருப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தின. இப்பிரிவு திட்டங்களின் வாயிலான லாப வரம்பு, 45 - 60சதவீதம் என்ற அளவில் உள்ளது.
அதேசமயம், நடுத்தர வருவாய்பிரிவினருக்கான குடியிருப்பு பிரிவில், 20 - 35சதவீத அளவிற்கே லாப வரம்பு உள்ளது. இதனால், உயர் வருவாய்பிரிவினருக்கான குடியிருப்பு திட்டங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டன. ஆனால், இக்குடியிருப்புகளுக்கான தேவை மிகவும் குறைந்து போயுள்ளது.
மும்பை
இரண்டாம் நிலை நகரங்கள் எனப்படும் சென்னை புறநகர், ஆமதாபாத், ஐதராபாத், கோவா, மொகாலி ஆகிய இடங்களிலும், மிகப் பெரிய நிறுவனங்கள், குடியிருப்பு திட்டங்களை தொடங்கின. தற்போது, வீடுகள் விற்பனை குறைந்துள்ளதால், இத்திட்டங்கள் மிக மந்தமாக நடைபெறுகின்றன. ஒரு சில நிறுவனங்கள், அவற்றின் திட்டங்களை கைவிட்டு விட்டன.
இதனால், சென்னை, புனே, ஆமதாபாத், ஐதராபாத் ஆகிய நகரங்களில், எண்ணிக்கை அடிப்படையிலான குடியிருப்புகளின் விற்பனை, 15 - 20சதவீதம் குறைந்துள்ளது. இது, டில்லியில், 20 - 25சதவீதமாகவும், மும்பையில் 60 - 70சதவீதமாகவும்சரிவடைந்துள்ளது.
இந்த நிலையிலும், நடுத்தர வருவாய்பிரிவினருக்கான குடியிருப்பு திட்டங்களை மேற்கொண்டு வரும் ஒரு சில நிறுவனங்கள், பாதிப்பு ஏதுமின்றி செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு இது குறித்து, பிரஸ்டிஜ் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி வெங்கட் ஆர்.நாராயணா கூறும்போது, பெங்களூருசந்தையில்,சதுர அடி 2,800 -4,000 ரூபாய்வரை விலை கொண்ட, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்பிரிவினருக்கான குடியிருப்புகளின் விற்பனை நன்றாக உள்ளது. முதல் அரையாண்டில், நிறுவனம் 1,000 கோடி ரூபாய்மதிப்பிலான குடியிருப்புகளை விற்பனை செ#துள்ளது. இரண்டாவது அரையாண்டில் மேலும், இரண்டு, மூன்று குடியிருப்பு திட்டங்களை அறிமுகம் செ#ய உள்ளோம். இதன்படி, சென்னையில் ஒரு குடியிருப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
லையாசஸ் போராஸ் நிறுவனரும், அதன் தலைவருமான பங்கஜ் கபூர் கூறும்போது, "மும்பையில், குடியிருப்புகளின் விலைசரியத் தொடங்கியுள்ளது.சர்வதேச பொருளாதார நெருக்கடி, வட்டி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டு வசதி கடனுக்கான வட்டி விகிதம் குறையும் வரை, குடியிருப்புகளின் விலைசரிவு தொடரும்' என்று தெரிவித்தார்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|