பதிவு செய்த நாள்
13 டிச2011
14:35

கார் விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதால், குஜராத்தில் புதிய ஆலை கட்டும் திட்டத்தை ஒத்திவைக்க மாருதி முடிவு செய்துள்ளது. கார் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் மாருதி புதிய நிறுவனங்கள் வருகையால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. தொழிலாளர் ஸ்ட்ரைக், பெட்ரோல் விலை, கார் கடன் வட்டி உயர்வு ஆகிய காரணங்களாலும் மாருதியின் கார் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலையில், எதிர்கால தேவையை சமாளிக்கும் விதமாக குஜராத்தில் புதிய ஆலை கட்டும் பணியில் மாருதி தீவிரமாக இறங்கியது. ரூ.4,000 கோடி முதலீட்டில் இந்த புதிய ஆலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. புதிய ஆலை அமைப்பதற்காக நிலத்தை தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த நிலையில், புதிய ஆலைக்கான நிலம் தேர்வு செய்யப்பட்டாலும் அதில் உடனடியாக ஆலை கட்டப்போவதில்லை என்று மாருதி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாருதி தலைவர் ஆர்.சி.பர்கவா கூறுகையில், "நீண்ட கால முதலீடுகளை சிறிது ஒத்திவைக்க உள்ளோம். குஜராத்தில் ஆலை கட்டுவதற்கான நிலம் தேர்வு பணிகள் தற்போது நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணிகள் நிறைவடையும். நிலம் தேர்வு செய்யப்பட்டாலும், ஆலை கட்டும் பணிகள் இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளுக்கு பின்னரே துவங்க திட்டமிட்டுள்ளோம். மார்க்கெட் நிலவரத்தை பொறுத்த ஆலை கட்டும் பணிகள் துவங்கப்படும். ஆனால், தற்போது இதுகுறித்து உறுதியாக எதையும் கூற இயலாது," என்றார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|