பதிவு செய்த நாள்
14 டிச2011
00:24

புதுடில்லி:பல்வேறு துறைகளில் சுணக்க நிலை காணப்பட்ட போதிலும், சென்ற நவம்பர் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், அதிகளவில் பணியாளர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக இன்போ எட்ஜ் குழுமத்தின் ஓர் அங்கமான, நோக்ரி டாட் காம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலத்தையொட்டி, அக்டோபரில், நிறுவனங்கள், பணியாளர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் குறைந்திருந்தது. மேலும், கடந்த 12 மாதங்களுக்கு பிறகு தொய்வடைந்திருந்த பணியமர்த்துதல் நடவடிக்கை, நவம்பரில் வேகம் பெற்றுள்ளது. செப்டம்பர் மற்றும் நவம்பரில் கட்டுமானம், மோட்டார் வாகனம், வங்கி ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு, அதிக மாற்றமின்றி காணப்பட்டது. இருப்பினும், அக்டோபரை விட, நவம்பரில் இத்துறைகளின்வேலைவாய்ப்பு முறையே, 20 சதவீதம், 34 சதவீதம் மற்றும் 21 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
அக்டோபரை விட, நவம்பர் மாதத்தில், தகவல் தொழில்நுட்பம், பீ.பி.ஓ., தொலைத்தொடர்பு துறை ஆகிய துறை களில் பணியமர்த்துதல் நடவடிக்கை வலுவடைந்துள்ளது. இத் துறைகளில் பணியமர்த்தப்பட்டவர்களின் எண் ணிக்கை முறையே, 29 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 14 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. மாதங்களின் அடிப் படையில், மென் பொருள் மற்றும் தயாரிப்புத் துறை வேலை வாய்ப்புகளுக்கான தேவை, 30 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.இதே காலத்தில், விற்பனை, கணக்கு மற்றும் மனித வள மேலாண்மை துறைகளுக்கான பணியாளர் தேவைப்பாடு முறையே, 35 சதவீதம், 31 சதவீதம் மற்றும் 22 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|