பதிவு செய்த நாள்
14 டிச2011
00:38

புதுடில்லி:மத்திய அரசின் மந்தமான செயல்பாடுகளால்,நாட்டின் முக்கிய துறைமுகங்களின் விரிவாக்கத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும், பல்வேறு சட்டச் சிக்கல்கள், கட்டுப்பாடுகள் காரணமாகவும்,துறைமுகங் களின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் உள்ளது.உதாரணமாக, நடப்பு 2011-12ம் நிதியாண்டில்,23 முக்கிய துறை முகங்களின் சரக்குகள் கையாளும் திறனை அதிகரிப்பது தொடர்பான, விரிவாக்க திட்டங்கள் மேற்கொள்ளப் படவுள்ளன.
இதில், தற்போது ஒரு துறைமுகத்தின் திட்டத்திற்கு மட்டுமே, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.விரிவாக்கத் திட்டங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, முக்கிய துறைமுகங்களின் நிலை இப்படியிருக்க, மாநில அரசின் கீழ் இயங்கும் துறைமுகங்களின் விரிவாக்கத் திட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த துறை முகங்களில், மாநில அரசுடன் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு, வளர்ச்சித் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி வருகின்றன.
சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த துறைமுகங்கள் கையாண்ட சரக்கில், சிறிய துறைமுகங்களின் பங்களிப்பு, 35 சதவீதம் (31.5கோடி டன்) என்ற அளவில் உள்ளது. வரும் 2020ம் ஆண்டில், முக்கிய துறை முகங் களை விட, அதிக அளவிலான சரக்குகளை சிறிய துறைமுகங்கள் கையாளும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களை விட, மாநில அரசின் கீழ் இயங்கும் சிறிய துறை முகங்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது.
சிறிய துறைமுகங்கள்:கடந்த ஐந்து ஆண்டுகளில், சிறிய துறைமுகங்களின் சராசரி வளர்ச்சி, ஆண்டுக்கணக்கில் 15 சதவீதமாக உள்ளது. இதே காலத்தில், முக்கிய துறைமுகங்களின் சராசரி வளர்ச்சி, ஆண்டுக்கணக்கில், 6 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது. சென்ற 2010-11ம் நிதியாண்டில், முக்கிய துறைமுகங்கள், 57கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளன. இது, முந்தைய நிதியாண்டை விட, 1.6 சதவீதம் அதிகமாகும். இதே காலத்தில், சிறிய துறைமுகங்கள் கையாண்ட சரக்குகள், 9 சதவீத வளர்ச்சி கண்டு, 29கோடி டன்னில் இருந்து, 31.5கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
கடந்த 2009-10ம் நிதியாண்டில், முக்கிய துறைமுகங்கள் மற்றும் சிறிய துறைமுகங்கள் சரக்குகளை கையாண்டதில், முறையே, 5.8 சதவீதம் மற்றும், 35.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளன.மாநில அர”களின் கீழ் இயங்கும் பெரும்பாலான சிறிய துறைமுகங்களில், தனியார் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளன. இந்நிறுவனங்களின் பங்குகள், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.
முந்த்ராபோர்ட், குஜராத் பிபாவவ்போர்ட், மார்க் காரைக்கால்போர்ட், எஸ்ஸார்போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், மாநில அர”களுடன் இணைந்து, சிறிய துறைமுகங்களில் செயல் பாடுகளைமேற்கொண்டு வருகின்றன.சென்ற 2010-11ம் நிதியாண்டில், 12 முக்கிய துறை முகங்களின் வருவாய், 4 சதவீத வளர்ச்சி கண்டு, 9,059கோடி ரூபாயாக உள்ளது. இவற்றின் நிகர லாப வளர்ச்சி, 9.4 சதவீதம் உயர்ந்து, 1,923கோடி ரூபாயாக உள்ளது. கவர்ச்சிகரமான கட்டணம், நவீன இயந்திரங்கள், குறைந்த ஊதியச் செலவுபோன்றவற்றால், சிறிய துறைமுகங்களின் வருவாய் வளர்ச்சி அதிகரித்து வருகிறது.
நிகர லாபம்:உதாரணமாக, சென்ற 2010-11ம் நிதியாண்டில், முந்த்ராபோர்ட் அண்டு எஸ்.ஈ.எஸ். (எம்.பி. எஸ்.இ.இசட்.) நிறுவனத்தின் மொத்த வருவாய், 35 சதவீதம் உயர்ந்து, 1,934கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் நிகர லாபம், 40.7 சதவீதம் அதிகரித்து, 986கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதேபோன்று, நடப்பு நிதியாண்டின், சென்ற செப்டம்பருடன் முடிந்த அரையாண்டில், எஸ்ஸார்போர்ட் நிறுவனத்தின் வருவாய், 58 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நிகர லாபம், 8கோடியில் இருந்து, 80கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
சிறிய துறைமுகங்களின் வளர்ச்சியைப்போன்று, நாட்டின் முக்கிய துறைமுகங்களும் வளர்ச்சி காணவேண்டும். அதற்கு, துறைமுகங்களை விரைவாக நவீனமயமாக்குவது அவசியமாகும்.மேலும், சரக்குகளை கையாளும் திறனை அதிகரிக்க,தேவையான நட வடிக்கைகளை எடுக்கவேண்டும். குறிப்பாக, சரக்குபோக்குவரத்து தடையின்றி நடைபெற தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.
இது தொடர்பாக, மத்திய கப்பல்போக்குவரத்து துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முனைந்துள்ளது. வளர்ச்சிக்கு தடையாக உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது, துணை துறைமுகக் கொள்கையை வடிவமைப்பது, முக்கிய துறைமுகங்களிடம் உள்ள நிதியை,இதர தனியார் துறைமுகங்களில் முதலீடு செய்ய அனுமதிப்பது, உள்ளிட்ட பல திட்டங்கள்,மத்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கின்றன.இத்திட்டங்களுக்கு, மத்தியஅரசு விரை வில் அனுமதி வழங்கும்பட்சத்தில், நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களின் வளர்ச்சிவேகம் கூடும் என லாம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|