தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு ... நவம்பரில் பணவீக்கம் 9.11% ஆக சரிவு நவம்பரில் பணவீக்கம் 9.11% ஆக சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டுகாட்டி, ஹார்லி டேவிட்சன் பைக்குளில் இந்திய உதிரிபாகங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2011
14:47

டுகாட்டி, ஹார்லி டேவிட்சன் என்றவுடன் நினைவுக்கு வருவது அந்த பைக்குகளின் அசாத்தியமான தோற்றமும், மிகுந்த திறன் கொண்ட இஞ்சினும்தான். வெளிநாட்டு பிராண்டு முத்திரையுடன் இந்திய சந்தையில் கலக்கி வரும் இந்த நிறுவனங்களின் பைக்குகளின் எஞ்சின்களில் இந்திய உதிரிபாகங்கள்தான் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது. ஆம், டுகாட்டி, ஹார்லி டேவிட்சன், யமஹா உள்ளிட்ட ஏராளமான சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெங்களூரை சேர்ந்த சன்சேரா எஞ்சினியரிங் நிறுவனம்தான் பைக்குகளுக்கான எஞ்சின் உதிரிபாகங்களை சப்ளை செய்து வருகிறது. முன்னணி பைக் நிறுவனங்கள் தயாரிக்கும் சாதாரண ரக பைக்குகளிலும், மோட்டோ ஜிபி பந்தயங்களில் பயன்படுத்தப்படும் ஸ்போர்ட்ஸ் பைக்குகளிலும் சன்சேரா நிறுவனத்தின் உதிரிபாகங்கள்தான் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது. உதிரிபாகங்களை தரமாக சப்ளை செய்வதற்காக சன்சேரா நிறுவனத்துக்கு டுகாட்டி நிறுவனத்தின் சிஇஓ கேப்ரியல் டெல் டோர்ஷியோ விருது வழங்கி கவுரவித்துள்ளார். இதுகுறித்து சன்சேரா எஞ்சினியரிங் நிறுவனத்தின் உரிமையாளர் சேகர் பேசுகையில்,: "யமஹா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்தான் எங்களது நிறுவனத்தை டுகாட்டிக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, டுகாட்டி நிறுவனத்தின் பைக்குகளுக்கு இஞ்சின் பாகங்களை சப்ளை செய்து வருகிறோம். மேலும், டுகாட்டி விருது மூலம் இந்தியாவால் எந்தளவுக்கு தரமான பொருட்களை வழங்க முடியும் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்கான வாய்ப்பாக கருதுகிறோம். மேலும், உலகின் தலைசிறந்த சப்ளையர்களுடன் கடும் போட்டியும் நிலவுகிறது," என்றார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)