பதிவு செய்த நாள்
17 டிச2011
01:08

சென்னை:சென்ற நவம்பர் மாதத்தில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச வாகனங்கள் விற்பனை, 35 சதவீதம் அதிகரித்து 1 லட்சத்து 8 ஆயிரத்து 28 வாகனங்களாக வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், நவம்பர் வரையிலான காலத்தில், மொத்த வாகனங்கள் விற்பனை,10 சதவீதம் உயர்ந்து 7 லட்சத்து 50 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது.சர்வதேச விற்பனையில், டாட்டா தேவூ மற்றும் டாட்டா ஹிஸ்பனோ கரோசிரா உள்ளிட்ட வர்த்தக வாகனங்களின் விற்பனை, 24 சதவீதம் அதிகரித்து, 49 ஆயிரத்து 724 ஆக உயர்ந்துள்ளது.
இதே மாதங்களில், இதன் அனைத்து வகை பயணிகள் கார் விற்பனை, 47 சதவீதம் வளர்ச்சி கண்டு, 58 ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களின் விற்பனை, 27 சதவீதம் உயர்ந்து, 29 ஆயிரத்து 183 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், ஜாகுவார் கார்கள் விற்பனை, 5 சதவீதம் குறைந்து, 5,315 ஆக உள்ளது. இது தவிர, லேண்ட்ரோவர் கார்கள் விற்பனை, 38 சதவீதம் உயர்ந்து, 23 ஆயிரத்து 868 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், நவம்பர் வரையிலுமான காலத்தில், ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்களின் ஒட்டுமொத்த விற்பனை, 19 சதவீதம் அதிகரித்து, 1 லட்சத்து 85 ஆயிரத்து 431 வாகனங்களாக உயர்ந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|