நவரத்தினங்கள்  ஏற்றுமதி ரூ.2.50 லட்சம் கோடியாக உயரும்நவரத்தினங்கள் ஏற்றுமதி ரூ.2.50 லட்சம் கோடியாக உயரும் ... டான்சி விற்பனை இலக்கு ரூ.112 கோடி டான்சி விற்பனை இலக்கு ரூ.112 கோடி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் ரூபாயின் மதிப்பு உயர்வு:சரிவுக்கு காரணம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2011
01:12

மும்பை:டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதையடுத்து, 53.64 ஆக இருந்த டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு நேற்று 52.73ஆக உயர்ந்தது.ரிசர்வ் வங்கி தற்போது அமல்படுத்தி உள்ள விதிகள், அன்னிய செலாவணி சந்தை நிலவரத்தை பயன்படுத்தி, ஊக அடிப்படையில் லாபம் அடைய நினைப்போரை கட்டுப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளன.
முன்கூட்டிய ஒப்பந்தம்:ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அன்னிய நிதி நிறுவனங்கள், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவதை, கருத்தில் கொண்டு முன்கூட்டிய ஒப்பந்த நடவடிக்கையை மேற்கொண்டன.
அதாவது, குறிப்பிட்ட காலத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, உயர்ந்தாலும் அல்லது குறைந்தாலும், குறிப்பிட்ட மதிப்பில், வர்த்தகத்தை மேற்கொள்ளும் வகையில், முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து கொண்டன.இதில், ஒரு சில நிறுவனங்கள் ஊக அடிப்படையில், வர்த்தகம் மேற்கொண்டதால், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. ரிசர்வ் வங்கி, இதை தடுத்து நிறுத்தும் வகையில், புதிய கட்டுப்பாட்டை அறிவித்தது.
இதன்படி, முன்பேர ஒப்பந்தத்தின் அடிப்படையில், அன்னியச் செலாவணியில் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை, மறு பதிவு செய்வது, ரத்து செய்வது மற்றும் புதுப்பிப்பதற்கும் கட்டுப்பாட்டை அமல்படுத்தியது.மதிப்பு உயர்வு:இதையடுத்து, வியாழனன்று, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு 54.20 வரை சென்று, அன்னியச் செலாவணி வர்த்தகம் முடியும் போது, 53.64ரூபாய் உயர்வுடன் முடிவடைந்தது.
மேலும், வெள்ளிக் கிழமையன்று, ரூபாயின் மதிப்பு, 52.73 ரூபாயாக மேலும் உயர்ந்தது.பொதுவாக, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, சரிவடையும் போது, ரிசர்வ் வங்கி அதன் கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியிலிருந்து, டாலரை அதிகளவில் புழக்கத்தில் விடும். ஆனால், தற்போது அதுபோன்ற நடவடிக்கை எடுக்காமல், அதன் அதிகாரத்தை பயன்படுத்தி, ரூபாய் வெளிமதிப்பின் சரிவை தடுத்தி நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணை பொது மேலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாகும். கையிருப்பில் உள்ள செலாவணியை கணிசமான அளவிற்கு, வெளியிட்டிருந்தால் தான், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பை உயர்த்தியிருக்க முடியும். அதேசமயம் ரிசர்வ் வங்கி, செலாவணியை அதிகளவில் வெளியிட்டால், அது, எதிர்கால இறக்குமதி தேவைக்கான செலாவணி இருப்பை குறைத்து விடும்.
அது நாட்டிற்கு அதிக இடர்பாட்டை ஏற்படுத்தும். இச்சூழ்நிலையில், அன்னியச் செலாவணி தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்கி, ரூபாயின் மதிப்பை உயர்த்தியுள்ள ரிசர்வ் வங்கியின் முடிவு வரவேற்கக் கூடியது.இவ்வாறு கோபால கிருஷ்ணன் கூறினார்.
மற்ற நாடுகளிலும்...கடந்த 1997ம் ஆண்டு, ஆசிய நாடுகளில், ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவடைந்தது.
அப்போது, ரிசர்வ் வங்கி தலையிட்டு, இதுபோன்ற ஒரு சில நடவடிக்கையை மேற்கொண்டு, ரூபாய் மதிப்பின் சரிவை தடுத்தி நிறுத்தியது.தற்போது, ஐரோப்பிய நிதி நெருக்கடியால், பல நாட்டு செலாவணிகளின் மதிப்பு சரிவடைந்துள்ளது. இதனால், ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள், அந்நாடுகளின் செலாவணி மதிப்பு சரிவடைவதை தடுக்க, இது போன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவடைவதற்கு, இந்தியாவில், அன்னிய நாடுகளின் முதலீடு குறைந்து போனது தான் காரணமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையால், அந்நாடுகள், இந்தியாவில் மேற்கொண்டு வந்த அன்னிய நேரடி முதலீடு மற்றும் அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில், செய்து வந்த முதலீடும் வெகுவாக குறைந்து போயுள்ளது.
மேலும், ஐரோப்பிய நாடுகளில் நிதி பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால், இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் கடன் சந்தைகளில் முதலீடு செய்து இருந்த ஐரோப்பிய நிதி நிறுவனங்கள் முதலீடுகளை வாபஸ் பெற்று வருகின்றன. இதனால், நாட்டிலிருந்து வெளியேரும் டாலரின் மதிப்பு கணிசமாக அதிகரித்து உள்ளது.இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தொகையை செலுத்துவதற்காக, நிறுவனங்கள் அதிகளவில் டாலரை வழங்க வேண்டியுள்ளது. ஒருபுறம் டாலர் வரத்து குறைந்து போன நிலையில், இறக்குமதியாளர்கள் அதிகளவில் டாலரை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், உள்நாட்டில், டாலர் புழக்கம் குறைந்து போயுள்ளது.
இச்சூழ்நிலையில், முன்கூட்டிய ஒப்பந்த வர்த்தகத்தில், ஒரு சில வர்த்தகர்கள் ஊக அடிப்படையில், வணிகம் மேற்கொண்டதை அடுத்து, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு செயற்கையாக சரிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதை தடுத்து நிறுத்துவதற்காகவே, ரிசர்வ் வங்கி நடவடிக்கையை எடுத்துள்ளது.ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு பல நிறுவனங்களும், பல அமைப்புகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கையை முன்கூட்டியே எடுத்திருந்தால், சர்வதேச நாடுகளின் மத்தியில், இந்தியாவின் மதிப்பு நன்கு இருந்திருக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)