பதிவு செய்த நாள்
17 டிச2011
09:55

நாமக்கல்: "வரும் 2011-2012ம் ஆண்டு டான்சி பொருட்கள் விற்பனை இலக்காக, 112 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு, டான்சியின் மூலம் பங்குத் தொகையாக, 14.39 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது,'' என, தமிழக ஊரக தொழில் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் சம்பத் பேசினார்.நாமக்கல்லில், டான்சி காட்சிக்கூடத் திறப்பு விழா நடந்தது. வருவாய்துறை அமைச்சர் தங்கமணி தலைமை வகித்தார். டான்சி தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் அலாவுதீன், மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊரக தொழில் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் சம்பத், காட்சிக் கூடத்தை திறந்து வைத்துப் பேசியதாவது:நாமக்கல் டான்சி வளாகம், வெற்றிடமாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில், டான்சிக் காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. டான்சி பொருட்கள் தரமானவை. டான்சி மூலம் தயாரிக்கப்படும், பீரோ, கட்டில் ஆகியவை, 18 கேஜ் இரும்பு தகட்டின் மூலம் தயாரிக்கப்படுகின்றன.இரும்பு பொருட்கள், இரும்பு எஃகு இந்திய கழகத்திலிருந்து பெறப்பட்டு தயாரிக்கப்படுகிறது. தனியாரிடம், கேஜ் குறைவான இரும்பு மூலம் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.டான்சி மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை, மக்கள் வாங்கி டான்சியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|