பொதுத் துறை தொலைபேசி நிறுவனங்கள்:ரூ.6,444 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க தீவிரம்பொதுத் துறை தொலைபேசி நிறுவனங்கள்:ரூ.6,444 கோடி கட்டண பாக்கியை வசூலிக்க ... ... சீரிய செயல்பாட்டில் டால்மியா சிமென்ட் நிறுவனம்:லாபத்தோடு வளர்த்தெடுக்கப்படும் பசுமை காடு- விஜயகோபால் - சீரிய செயல்பாட்டில் டால்மியா சிமென்ட் நிறுவனம்:லாபத்தோடு ... ...
நடப்பாண்டில் இதுவரையிலும் ...இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீட்டில் சரிவு நிலை- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2011
00:55

நடப்பு நிதியாண்டின், டிசம்பர் 5ம் தேதி வரையிலான காலத்தில், இந்திய நிறுவனங்கள் அயல் நாடுகளில் மேற்கொண்ட முதலீடு வெகுவாக குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் முதலீடு சரிவடைந்துள்ளது. குறிப்பாக, மொரீஷியஸ், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில், இந்திய நிறுவனங்களின் முதலீடு, சென்ற நிதியாண்டின், இதே காலத்தை விட சரிவடைந்துள்ளது.மொரீஷியஸ்:ஆப்ரிக்க கண்டத்தின் தென்கிழக்கே அமைந்துள்ள மொரீஷியஸ் தீவில், நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிச., 5 வரையிலான காலத்தில் இந்திய நிறுவனங்கள் 181.4 கோடி டாலர் (9,070 கோடி ரூபாய்) அளவிற்கே முதலீடு மேற்கொண்டுள்ளன.
இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் 505 கோடி டாலர் (25 ஆயிரத்து 250 கோடி ரூபாய்) என்ற அளவிற்கு உயர்ந்திருந்தது. கடந்த 2009-10ம் நிதியாண்டின் இதே காலத்தில், இந்த முதலீடு 215 கோடி டாலராக இருந்தது.இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூரில் மேற்கொண்டு வரும் முதலீடும், குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிச., 5 வரையிலான காலத்தில், இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூரில் 1.57 கோடி டாலர் ( 7,850 கோடி ரூபாய்) முதலீடு மேற்கொண்டுள்ளன. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 398 கோடி டாலராக (19 ஆயிரத்து 900 கோடி ரூபாய்) உயர்ந்து காணப்பட்டது. முந்தைய 2009-10ம் நிதியாண்டின், இதே காலத்தில், இது 380 கோடி டாலராக (19 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது.
சிங்கப்பூர்:கடந்த 2009-10ம் நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள் அதிக முதலீடு மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில், சிங்கப்பூர் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாகவே, மேற்கண்ட நாடுகளில், இந்திய நிறுவனங்களின் முதலீடு குறைந்துள்ளது என, டில்லியை சேர்ந்த பரூச்சா அண்டுபார்ட்னர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் கும்கும் சென் தெரிவித்தார்.
அமெரிக்கா:ஆசிய, வளைகுடா நாடுகள் மட்டுமின்றி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும், நம்நாட்டின் அன்னிய முதலீடு குறைந்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், நெதர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய முதலீடு, 62 கோடி டாலர் (3,100 கோடி ரூபாய்) என்ற அளவிற்கு குறைந்துள்ளது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டின், இதே காலத்தில் 151 கோடி டாலராகவும் (2,550 கோடி ரூபாய்), முந்தைய 2009-10ம் நிதியாண்டின் இதே காலத்தில்,153 கோடி டாலர் (7,650 கோடி ரூபாய்) என்ற அளவிலும் இருந்தது.ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தில், அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு 61.4 கோடி டாலர் (3,070 கோடி ரூபாய்) என்ற அளவிற்கு உள்ளது. இது, 2010-11 மற்றும் 2009-10ம் நிதியாண்டுகளில் முறையே 121 கோடி டாலர் (6,050 கோடி ரூபாய்) மற்றும் 87 கோடி டாலர் (4,350 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது.
கேமன் தீவு:இதே காலத்தில், ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில், இந்திய நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு 85 கோடி டாலரில் (4,250 கோடி ரூபாய்) இருந்து, 26 கோடி டாலராக (1,300 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, 2009-10ம் நிதியாண்டின் இதே காலத்தில் 64 கோடி டாலராக இருந்தது.கேமன் தீவில், சென்ற ஏப்ரல் முதல் டிச., 5 வரையிலான காலத்தில், இந்தியர்கள் மேற்கொண்ட முதலீடு, 14 கோடி டாலர் (700 கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது. இது, 2010-11ம் நிதியாண்டின் இதே காலத்தில் 44 கோடி டாலராக (2,200 கோடி ரூபாய்) இருந்தது.மேற்கண்ட நாடுகளில், இந்தியர்கள் மேற்கொண்ட முதலீடு குறைந்துள்ள நிலையில், இங்கிலாந்தில் முதலீடு அதிகரித்துள்ளது. ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தில், இங்கிலாந்தில், இந்திய நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு 90 கோடி டாலராக (4,500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, 2010-11ம் நிதியாண்டின், இதே காலத்தில் 40 கோடி டாலராகவும் (2,000 கோடி ரூபாய்), முந்தைய 2009-10ம் நிதியாண்டின், இதே காலத்தில் 35 கோடி டாலர் (1,750 கோடி ரூபாய்) என்ற அளவிலும் இருந்தது.
பிரிட்டிஷ் விர்ஜின்:மதிப்பீட்டு காலத்தில், பிரிட்டிஷ் விர்ஜின் தீவில், இந்தியர்கள் மேற்கொண்ட முதலீடு, 45 கோடி டாலராக (2,250 கோடி ரூபாய்) இருந்தது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டின், இதே காலத்தில் 28 கோடி டாலராக (1,400 கோடி ரூபாய்) இருந்தது.அயல்நாடுகளில், இந்தியாவின் முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, ரிசர்வ் வங்கி, கடந்த 2008ம் ஆண்டு முதல், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு தொடக்கம் முதல் அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு பிரச்னை, ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடி போன்றவற்றால், சர்வதேச பொருளாதாரம் சுணக்கம் கண்டுள்ளது.இதனால், அயல்நாடுகளில், இந்திய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மேற்கொள்ளும் முதலீடு சரிவடைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)