நடப்பாண்டில் இதுவரையிலும் ...இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீட்டில் சரிவு நிலை- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பாண்டில் இதுவரையிலும் ...இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீட்டில் ... ... சவுதியில் இருந்து இந்திய விசா "ஆன்-லைன்' மூலம் பெறலாம் சவுதியில் இருந்து இந்திய விசா "ஆன்-லைன்' மூலம் பெறலாம் ...
சீரிய செயல்பாட்டில் டால்மியா சிமென்ட் நிறுவனம்:லாபத்தோடு வளர்த்தெடுக்கப்படும் பசுமை காடு- விஜயகோபால் -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2011
00:58

திருச்சி, தொழில் நகரம் என்ற சிறப்புடன் திகழ, திருவெறும்பூரில் உள்ள "பெல்' மற்றும் கல்லக்குடியில் உள்ள டால்மியா சிமென்ட் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன.குறிப்பாக, டால்மியா சிமென்ட் நிறுவனம் பல்லாயிரக்கணக்கான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. "கலாசாரம் ஒழுக்கம்' ஆகியவையே தாரக மந்திரம் என உரக்க சொல்லும், திருச்சி டால்மியா சிமென்ட் நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஜே.வி.குன்குனே, ஒரு காலை பொழுதில் நம்மிடம் பரிமாறியவை.திருச்சி டால்மியா சிமென்ட் நிறுவனத்தை பற்றி கூறுங்கள்?திருச்சி டால்மியாபுரத்தில், 1939ம் ஆண்டு, ஜெய்தயாள் டால்மியாவால் சிமென்ட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில், தினசரி, 250 டன் சிமென்ட் தயாரிக்கப்பட்டது.
எங்களுக்கு சொந்தமாக கல்லக்குடி, கோவண்டாக்குறிச்சி பஞ்சாயத்து வடுகர்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள குவாரிகளிலிருந்து, சிமென்டுக்கு மூலப்பொருளான, "லைம் ஸ்டோன்' எடுக்கிறோம்.இன்னும் 25 ஆண்டுக்கு, "லைம் ஸ்டோன்' கிடைக்கும் என்றாலும், கரூர் உள்ளிட்டபகுதிகளில் உள்ள குவாரிகளை வாங்கி வருகிறோம். தற்போது இங்கு புதியதாக ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. விமான ஓடுதளத்துக்கான, "ஏர் ஸ்டர்ப்ஸ்' ரயில் தண்டவாளத்துக்கு கீழ் பொருத்தப்படும், "ரயில்வே ஸ்லீப்பர்ஸ்' எண்ணெய் கிணறுக்கான சிமென்ட் என உலகத்தரம் வாய்ந்த ஏழு வகையான சிமென்ட்கள் தயாரிக்கப்படுகின்றன.
உங்களுடைய மொத்த லாபம் எவ்வளவு? வரும் நிதியாண்டின் எதிர்பார்ப்பு என்ன?
திருச்சி டால்மியா சிமென்டின் மொத்த வர்த்தகம் கடந்தாண்டு, 1,300 கோடி ரூபாய். திருச்சி, அரியலூர் சிமென்ட் ஆலைகளின் வர்த்தகத்தை சேர்த்து, 1,700 கோடி ரூபாய். இந்த வர்த்தகம் வரும் நிதியாண்டில், 12 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.புதிய சிமென்ட் வகை அறிமுகப்படுத்தப்பட உள்ளதா?"நேஷனரி சிமென்ட்' என்ற புதிய சிமென்ட் வகையை கண்டு பிடித்துள்ளோம். மிக உறுதியான, தரமான இவ்வகை சிமென்ட், குறுகிய நேரத்தில் செட்டாகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது,
விரைவில் விற்பனைக்கு வரும்.புதிய சிமென்ட் மட்டுமல்லாது, எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், "நியூ திங்க்' என்ற நிகழ்வின் மூலம், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறோம். வருங்காலங்களில் சிறந்த கண்டுபிடிப்பு இயந்திரங்களை எங்களது நிறுவனத்தில் பயன்படுத்த இருக்கிறோம்.
கடும் மின்வெட்டை எப்படி சமாளிக்கிறீர்கள்?நாங்கள் அரசிடம் மின்சாரம் கேட்பதில்லை. சிமென்ட் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை எரிக்கும்போது கிடைக்கும் கரியை கொண்டு, எங்களுக்கு தேவையான மின்சாரத்தை நாங்களே தயாரித்துக் கொள்கிறோம்.
சுயதேவைக்கு மின்சாரம் போக, மீதமாகும் 6-8 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசுக்கு விற்பனை செய்கிறோம். அடுத்த மாதத்தில், 11 மெகாவாட் மின்சாரத்தை அளிக்க இருக்கிறோம்.உங்களது நிறுவனத்தால் சுற்றுச்சூழல் கெடுகிறது; குடிநீர் பிரச்னை ஏற்படுகிறது என்று பரவலாக குற்றச்சாட்டு உள்ளதே?சுற்றுச்சூழல் கெடாத வகையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனைத்து நிபந்தனைகளையும் முழுமையாக நிறைவேற்றி வருகிறோம். எங்களது நிறுவனம் ஒரு பசுமை சோலையாக காட்சியளிப்பதே அதற்கு அத்தாட்சி.
குவாரியில் 500 அடிக்கு மேல் பறிப்பதால், நிலத்தடி நீர் கிடைக்கவில்லை என்கின்றனர். குவாரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் முழுவதும் மக்களின் பயன்பாட்டுக்காகவே வழங்கப்படுகிறது.இதற்காக வடுகர்பேட்டையில், 16.5 லட்ச ரூபாய் செலவில் மேல்நிலை தேக்கத் தொட்டியும், 19 இடங்களில் சின்டெக்ஸ் தொட்டிகளும் அமைத்து, மக்களுக்கு தண்ணீர் வழங்குகிறோம்.சுயதொழில் துவங்க வட்டியில்லா கடன் வழங்குகிறோம். சிமென்ட் நிறுவனத்தின் சார்பில், மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி, ஐ.டி.ஐ., மூலம் மாணவர்களுக்கு கல்வியறிவை போதிக்கிறோம்.
லாபம் மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல், இப்பகுதியை பசுமைக் காடாக மாற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபடுகிறோம்.திருச்சி வளர்ச்சியில் உங்களது பங்கு என்ன?சிமென்ட் உற்பத்திக்காக நிலக்கரியை எரிக்கிறோம். அணையா அடுப்பாக விளங்கும் அதில், திருச்சி மாநகராட்சியில் இருந்து பெறப்படும் குப்பைகளை எரிக்கும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம்.குப்பைகளில் இருந்து பெறப்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் குப்பைகளை, சுற்றுச்சூழல் மாசுப்படாத வகையில் எரிபொருளாக பயன்படுத்த உள்ளோம். அதற்கான ஒத்திகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் பிறகு நாள் ஒன்றுக்கு, 60 டன் வரை குப்பைகளை எரிக்க இருக்கிறோம். இதனால், ஆண்டுக்கு சிறியளவே எங்களுக்கு நிலக்கரி தேவை குறையும் என்றாலும், பொதுநல நோக்கில், திருச்சி மக்களுக்கு செய்யும் தொண்டாக இப்பணியை செய்ய உள்ளோம்.இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில், 10 லட்ச ரூபாய் மதிப்பில், சர்வதேச தரத்தில் மின்னொளி வாலிபால் மைதானம் அமைத்து தந்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)