ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு ... துறைமுகங்களின் விரிவாக்கத்திற்கு ரூ.2.77 லட்சம் கோடி துறைமுகங்களின் விரிவாக்கத்திற்கு ரூ.2.77 லட்சம் கோடி ...
மொபைல் போன் இறக்குமதி 14 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2011
00:06

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் மொபைல் போன் இறக்குமதி, 13.8 சதவீதம் உயர்ந்து, 4.70 கோடியாக அதிகரித்துள்ளது. இரட்டை சிம் கார்டு கொண்ட மொபைல் போன் சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளதால், இறக்குமதி, வளர்ச்சி கண்டுள்ளதாக, ஐ.டீ.சி., நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், மொபைல் போன் இறக்குமதி வளர்ச்சி, 12 சதவீதம் என்ற அளவில் இருந்தது.நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டில், மொபைல் போன் இறக்குமதி, 18.44 கோடியாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, வரும் 2015ம் ஆண்டில், 30 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சந்தை, 2011-2015ம் ஆண்டுகளில், ஆண்டுக்கு 13.03 சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதே காலத்தில் ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சி, ஆண்டுக்கணக்கில் 63.4 சதவீதமாக உயரும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகை போன்களின் இறக்குமதி, வரும் 2015ம் ஆண்டு, 7.75 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின், சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், ஸ்மார்ட் போன் சந்தை, ஆண்டுக்கணக்கில் 51.50 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. காலாண்டு வளர்ச்சி 21.4 சதவீதம் என்றளவில் உள்ளது.மொத்த மொபைல் போன் சந்தையில், ஸ்மார்ட் போன் சந்தை பங்களிப்பு, 6.5 சதவீதம் என்றளவில் உள்ளது.இந்தியாவில், மொபைல் போன் மற்றும் ஸ்மார்ட் போன் சந்தையில் பின்லாந்து நாட்டை சேர்ந்த நோக்கியா முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், மொபைல் போன் சந்தையில் 31.8 சதவீத பங்களிப்பையும், ஸ்மார்ட் போன் சந்தையில் 35.3 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.கொரியாவின் சாம்சங் நிறுவனம், மொபைல் போன் சந்தையில் 17.5 சதவீத பங்களிப்பையும், ஸ்மார்ட் போன் பிரிவில் 26 சதவீத பங்களிப்பையும் கொண்டு, இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஸ்மார்ட் போன் சந்தையில், ஆண்ட்ராய்ட் இயக்கத் தொகுப்பிலான சாதனங்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியாவில், இச்சந்தையில், முதன் முறையாக, சிம்பியன் இயக்கத் தொகுப்பில் இயங்கும் ஸ்மார்ட் போன்களை விட, ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களின் பங்களிப்பு, 42.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.மேலும், நடப்பு நிதியாண்டின், சென்ற செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், முந்தைய காலாண்டை விட, ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களின் இறக்குமதி,90 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)