பதிவு செய்த நாள்
22 டிச2011
00:07

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. நேற்று முன்தினம், அமெரிக்க பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்ததையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.இருப்பினும், ஒட்டு மொத்த அளவில் சர்வதேச பங்கு சந்தைகளில், வர்த்தகம் சுணக்கம் அடைவதற்கே வாய்ப்புள்ளது. உலக நிலவரம், கடந்த 2008ம் ஆண்டை விட, மோசமாகவே உள்ளது. எனவே எந்த ஒரு நிலையிலும், வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகலாம் என, பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ்,'இந்தியாவின் எதிர்காலம் வளமாகவே உள்ளது. ஒரு சில பிரச்னைகள் மற்றும் சர்வதேச நிலவரத்தால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகி வருகிறது' என தெரிவித்துள்ளது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, நுகர்வோர் சாதனங்கள், மின்சாரம், எண்ணெய்,எரிவாயு, மருந்து, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், நீண்ட நாட்களுக்கு பிறகு அதிகரித்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 510.13 புள்ளிகள் அதிகரித்து, 15,685.21 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 15,727.31 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,377.04 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 148.95 புள்ளிகள் உயர்ந்து, 4,693.15 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 4,707.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,601.95புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|